“ஞானபீட”விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை சந்தித்து வாழ்த்து மலர் கொடுத்து வாழ்த்தி மனம் திறந்த இசையமைப்பாளர் செளந்தர்யன்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்பது மகா கவி சுப்ரமணிய பாரதி தமிழை போற்றிய வாழ்த்துக் கூற்று…
செளந்தர்யன் ஆகிய நானோ,
“யாமறிந்த மொழிகளிலே வைரமுத்துவின் தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்”
ஆம்…
அவர் தமிழை நான் செவியால் கேட்பதில்லை…
உணர்வால் உட்கொண்டு பருகுகிறேன்.
அவரோடு நூறு திரைப்படங்களுக்கு மேல் பயணித்து ஆயிரம் பாடல்களை ரசிகர்களுக்கு விருந்திட நினைத்தேன்,
ஆனால் சொற்ப திரைப்படங்களே என்றாலும்,உலகமெங்கும் ஒலிப்பது நூறு படங்களுக்கு ஒப்பான பாடல்களாய்…
“மத்தாளம் கொட்டுதடி மனசு” பாடலில்…
கிராமத்து இளசுகளின் இயல்பான வாழ்க்கையை கிண்டலடித்து வெல்ல வார்த்தைகளாய் செவிக்கும் எச்சிலூற வைத்திருப்பார்…
“உள்ளமே உனக்கு தான்” என்ற பாடலில்…
காதலில் யாரும் சொல்லாத உணர்வுகளை கச்சிதமாய் கடந்து கரை கண்டிருப்பார்…
“கடவுளும் நீயும் ஒரு தாய் பிள்ளை”பாடலில்…
தாய்மை உணர்வை தாலாட்டி தூங்க வைத்திருப்பார்…
“ஆத்தாடி என்ன ஒடம்பு” பாடலில்…
அக்கக்காய் இளசுகளின் உணர்வுகளை ஆணிவேர் வரை
அலசி ஆராய்ந்திருப்பார்…
“ஆத்தி வாடையில” பாடலில்…
துயரம் வரும் போது துவளாதே…
வீழ்வதில் தான் வெற்றி என்றிருப்பார்…
“அடியே அடி சின்னபுள்ள” பாடலில்…
விரசத்தின் ஆழத்தை
வீரியப்படுத்தியிருப்பார்…
இப்படி எல்லா வாழ்வியல் உணர்வுகளையும்,எனது சொற்ப திரைப்படங்களின் பாடல்களில் சொன்னதால் என்னவோ..!
நூறு படங்களுக்கு மேல் இசையமைக்கும் ஒரு சூழல் எனக்கு அமையவில்லையோ…?
“ஞானபீட”விருது பெற்ற இந்த ஞானக் கவிஞர் வைரமுத்து அவர்களின் கடலளவு தமிழை கைப்பிடியளவு,கைப்பிடியளவு எடுத்து மெட்டமைத்து இதுவரை ரசிகர்களுக்கு வழங்கியதில் மனம் நிறைவு கொள்கிறேன்…
இன்னும் விருதுகள் விழுதுகளாய்,இவருடைய கவிக்கும்,இலக்கியத்திற்கும் தங்க சால்வை போர்த்தி சிறப்பு சேர்க்க “ஞானபிட”விருது பெற்ற இந்த நன்னாளில் வாழ்த்துகின்றேன்…
இசையமைப்பாளர்
செளந்தர்யன்