“அனோமி”திரைப்பட விமர்சனம்…

Share the post

“அனோமி”திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:- பாவனா, ரஹ்மான், ஷெபின் பென்சன்,

விஷ்ணு அகஸ்தியா, பினு பப்பு, அர்ஜுன் லால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : –
ரியாஸ் மராத்.

மியூசிக்:- ஹர்ஷவரதன் ராமேஷ்வர் .

ஒளிப்பதிவு:-
சுஜித் சார்ங்.

படத்தொகுப்பு:-
கிரியன் தாஸ்.

தயாரிப்பாளர்கள்:- குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், பிளிட்ஸ்கிரீக்

பிலிம்ஸ், பாவனா, ஆதித் பிரசாசன குமார்.

கைரேகை தடவியல் நிபுணரான பாவனா, சாலை விபத்து

ஒரு விபத்தில் தனது பெற்றோரை இழந்து விடுகிறார். அந்த விபத்தில் சிக்கி

உயிர் பிழைத்த அவரது தம்பி மன ரீதியாக புத்தி சுவாதின‌ நிலையில் உடல் ரீதியான பாதிக்கப்பட்டு, மனநிலை

தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.

அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து தனது‌ தம்பியை காப்பாற்றும் முயற்சியில் பாவானா

ஈடுபடுவதும், தம்பி தான் உலகம் என்று உயிர் என வாழ்கிறார்.
இடையே, பாவனாவின் தம்பி போன்ற

மனநிலையில் இருக்கும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்

கொள்கிறார். அந்த வழக்கை காவல்துறை அதிகாரி ரஹ்மான்

மிக சாதாரணமாக கையாண்ட நிலையில், சில தினங்களில் அதே

முறையில் பாவனாவின் தம்பியும் இறக்கிறார். இந்த இரண்டு

மரணங்களுக்கு இருக்கும் ஒற்றுமை மற்றும் பிரேத

பரிசோதனையில் கிடைத்த சில தகவல்களை வைத்து, இரண்டும்

கொலை என்பதை பாவனா கண்டுபிடிக்கிறார்.

ஆனால், இந்த விஷயத்தில் காவல்துறை

தொடர்ந்து மெத்தனம் காட்ட, மூன்றாவதாக இளம் பெண் ஒருவர் அதே பாணியில் மறுகொலை

செய்யப்படுகிறார். இதன் மூலம் தொடர் சைக்கோ கொலை

என்பதை உறுதிப்படுத்தும் பாவானா,

கொலையாளியை பிடிக்க களத்தில் இறங்குகிறார். இந்த முறை

காவல்துறையும் தீவிரம் காட்ட, வழக்கு சூடுபிடிக்க தொடங்குகின்றன.

அன்று கொலை நடந்த இடங்களில் கிடைத்த நான்கு வேன் சக்கர வாகனத்தின்

டயர் அடையாளம் மற்றும் கொலை செய்யப்பட்டவர்
களின் உடலில் கலந்திருக்கின்ற அமிலம், இவை

இரண்டை மட்டும் தடயங்களாக வைத்துக் கொண்டு

கொலையாளியை தேடிச் செல்லும் பாவனா, அவரை எப்படி

கண்டுபிடிக்கிறார் ?, எதற்காக இந்த கொலைகள்? என்பதை

விறுவிறுப்பாக, வியக்க வைக்கும் விதத்திலும் சொல்வது தான் “அனோமி”

கதையின் கதைக்களம் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பாவனா, தடவியல்

நிபுணர் என்றாலும், காவல்துறையை மிஞ்சும் விதத்தில் தனது புலன்

விசாரணை மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார். பெரிய அளவிலான

தடயங்கள் இல்லை என்றாலும், கொலையாளியை

அவர் நெருங்கும் விதம், சீரியஸான காட்சிகளை கையாண்ட முறை

என தன் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் தன்

கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஹ்மானின் கதாபாத்திரம்

ஆரம்பத்தில் சாதாரணமாக பயணிப்பது இரண்டாம் பாதியில் கதையை சுமந்து, பாவனாவுக்கு தோள்

கொடுக்கின்றன கதாபாத்திரமாக கவனம் ஈர்க்கின்றன. தனது அளவான

நடிப்பின் மூலம் படத்திற்கு ரஹ்மான பலம் சேர்த்திருக்கிறார்.

பாவனாவின் தம்பியாக நடித்திருக்கிறார் ஷெபின் பென்சன், காதலனாக நடித்திருக்கிறார் அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்

திரைக்கதையில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர்

சுஜித்சாரங், கொலை செய்யப்பட்டவர்
களின் கண்கள்

ஏதோ சொல்ல வருவதை தனது கேமரா மூலம் பார்வையாளர்
களுக்கு புரிய வைத்திருப்பது, கொலைக்கான

காரணத்தை காட்சி மொழியில் விவரித்த விதம் மூலம் வியக்க வைத்திருக்கிறார்.

ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை

விவரிக்கும் விதத்தில் அமைந்திருக்
கின்றன. பின்னணி இசை அதிகம் சத்தம்

அதே சமயம் திரைக்கதையில் இருக்கும்

பதற்றத்தையும், பரபரப்பையும் அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்
கின்றனது.

படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் பயணிக்க

தொடங்கிவிடும் பார்வையாளர்களின் கவனம் வைக்கும் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர்

கிரியன் தாஸ், படத்தை வேகமாக நகர்த்திச் சென்றாலும்,

இயக்குநர் சொல்ல முயற்சித்திருக்கும் முக்கியமான

விஷயத்தை எளிதில் புரிய வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் ரியாஸ் மராத், கிரைம் சஸ்பென்ஸ்

திரில்லர் மற்றும் சைக்கோ திரில்லர் ஜானர் படம் என்றாலும்,

கொலைக்கான காரணத்தை வித்தியாசமாக கையாண்டிருப்பது, அதை காட்சிப்படுத்திய

விதத்தை தொழில்நுட்ப ரீதியாக பிரமாண்டமாகவும்,

புதிதாகவும் படமாக்கியிருக்
கிறார் பார்வையாளர்களிடம் பாராட்டு பெறுகிறார்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி படு வேகமாகவும், பரபரப்பாகவும்

பயணிப்பதுடன், சைக்கோ திரில்லர் பாணியிலான திரைப்படங்களில் இதுவரை

சொல்லப்படாத ஒரு விஷயத்தை அறிவியல் பூர்வமாக கையாண்ட விதம் மற்றும் வெறும்

வசனமாக மட்டும் இன்றி, அதை காட்சியாகவும் விவரித்த முறை

பார்வையாளர்
களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுத்தது.

படம் பார்த்தத்தில் , “அனோமி ” கிரைம், திரில்லர், பட விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தந்து

தைரியத்துடன் புத்துயிர் கொடுக்கும்.அனைவரும் பார்க்க

வேண்டிய திரைப்படம் இதை திரையரங்குகளில் கண்டு களியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *