
” மெட்ராஸ் மாஃபியா கம்பெனி” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:- ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசிலயா, முனிஷ்காந்த், ராம்ஸ், ஆராத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் : – ஏ.எஸ். முகுந்தன்.
மியூசிக் :- ஸ்ரீகாந்த் தேவா.
ஒளிப்பதிவு :-
அசோக்ராஜ்
தயாரிப்பாளர்கள் :- அண்ணா புரொடக்ஷன்ஸ் – வி.சுகந்தி அண்ணாதுரை.
சென்னையின் நடக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு
ரவுடியை வைத்து ஏஜெண்டாக வைத்து அதன் மூலம் பல
குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், மீது
எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அவருக்கு எதிரான
ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை
அதிகாரி சம்யுக்தா
ஈடுபடுகிறார். அதே சமயம், தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர்
ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இந்த இரண்டு
தரப்பினரிடம் இருந்து ஆனந்தராஜ் எப்படி தப்பித்து, தனது மாஃபியா தொழிலை தொடர்ந்தாரா ? இல்லையா ?
என்பதை கலகலப்பாக சொல்வதுதான் “மெட்ராஸ் மாஃபியா கம்பேனி”யின் கதைக்களம்.
வில்லனாக மிரட்டிவிட்டு தற்போது நகைச்சுவை நடிகராக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும்
ஆனந்தராஜ், இந்த படத்தில் வில்லத்தனமான நடிப்புமூலம்மிரட்ட
வும் செய்கிறார்,
நக்கலான பேச்சின் மூலம் சிரிக்கவைக்கும் பணியையும் செய்து வருக்கிறார். இந்த படத்தில்
காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் சக்யுக்தா.காக்கிசீறுடையில் கம்பீரமாக இருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார், தனது கதாபாத்திரத்திற்கு
நியாயம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.
ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா,
கொடுத்த வேலையை குறையில்லாமல்
செய்து சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்.
கொண்டித்தோப்பு வரதன் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் கத்தி
உள்ளிட்டஆயுதங்களுடன் வலம் வந்தாலும், படம் முழுவதும்
பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் முனீஷ்காந்த்.
ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும்
ஆராத்யா, அளவான அழகு மற்றும் நடிப்பு மூலம் கவர்கிறார்.
ராம்ஸ், சசிலயா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தாளம் போட வைக்கும் குத்துப்பாட்டும்,
மெய்மறந்து ரசிக்க வைக்கும் மெலொடி பாட்டும் படத்திற்கு பலமாக
பயணித்திருக்
கின்றன. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக
படமாக்கி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்
கிறார்.
கதை எழுதியிருக்கும் வி.சுகந்தி அண்ணாதுரை, ”ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள்,
அப்போது அவர்
களுக்கு சொந்தம் என்று நினைத்த எதுவும் அவர்களுடையது இல்ல, என்ற
உண்மை தெரிய வரும்” என்ற கருத்தை உணர்த் திருக்கிறார்.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தன், கதையாசிரியரின் கருத்து சீரியஸானதாக
இருந்தாலும், அதை கமர்ஷியல் காமெடி ஜானர் மூலம் சொல்லவந்திருக்
கிறார்.
ஆனந்தராஜ் என்ற நடிகரை கதையின் நாயகனாக வைத்துக் கொண்டு காமெடி
படமாக மட்டும் இல்லாமல் மக்களுக்கு கருத்து சொல்லும் விதமாகவும்
திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர்
ஏ.எஸ்.முகுந்தன், அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களையும் சேர்த்து
பார்வையாளர்
களுக்கு பொழுதுபோக்கு விருந்து படைத்திருக்கிறார்.
படம் பார்த்தத்தில், “மெட்ராஸ் மாஃபியா கூட்டத்தில் கம்பெனி” நிகர லாபம் தரும்
அடையும். கம்பெனி.இது ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் காமெடி
நிறைந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…