வீரவணக்கம்”திரைப்பட விமர்சனம்…

Share the post

“வீரவணக்கம்”
திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ்

பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ்,

சித்தங்கனா, ஐஸ்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :- அனில் வி. நாகேந்திரன்.

மியூசிக் :-எம் .கே.
அர்ஜுனன்.
பெரும்பாவூர்.ஜி.
ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார்.

ஒளிப்பதிவு :-
கவியரசு.

இது கேரளாவில் நடந்த உண்மை சம்பவம்.

கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின்

வீர வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவுக்கும்,‌இது தமிழகத்துக்கும் அரசியல் ரீதியாகவும், முதல் பெண்கள்

முன்னேற்றம் மற்றும் சமூக நீதி போராட்டங்கள் ரீதியாகவும் இருக்கும்

ஒற்றுமையை எடுத்துரைப்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

தமிழக கிராமம் ஒன்றின் செல்வந்தரான பரத், கம்யூசனிவாதியாக இருக்கிறார்.

ஊர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது, சாதியினரில், ஏழை

பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு வித்தியாசமாக பார்க்காமல் .

அனைவருடனும் பக்கமாகவும் பழகுகிறார்.

அதே சமயம், அவரது பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில்

பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பது, அந்தமக்களின்

பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை

கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார்.

அப்போது 96. வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சி

வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவில் கம்யூனிய புரட்சி

உருவாகி, விஸ்வரூபம் எடுத்தது என்பதை விவரிப்பது தான்

“வீரவணக்கம்” 1940 – ஆண்டில். தொடங்கும் கதை 1946 வரை பயணிக்கின்றனது.

இந்த காலக்கட்டங்களில் வெள்ளையனை

வெளியேற்ற ஒரு தரப்பு போராடிக் கொண்டிருந்த சமயத்தில்,

இந்திய கிராமங்களில் தனி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்த

ஜமீன்கள். மற்றும் நில சுவாந்தர்கள் மூலம் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாய தொழிலாளர்களை

அனைவரையும் மீட்டு, இதுல புதிய மக்கள் புரட்சியை கம்யூனிசம் எப்படி உருவாக்கியது,

என்பதை எதார்த்தாம் மீறாமல், அழுத்தமாக பதிவு

செய்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.

இதுல பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

சமுத்திரக்கனி, புரட்சிகரமான வசனங்களை உணர்வுப்பூர்வமாக

பேசி நடித்துள்ளார் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்

மக்களுக்காக போராடிய தலைவர்களின்

தியாகங்களை நினைவுப்படுத்தும் வகையில்

ஆக்ரோஷமாகவும், உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்

சமுத்திரக்கனி, படத்திற்கும் பி.கிருஷ்ண பிள்ளை

கதாபாத்திரத்தில மிகப்பெரிய அடையாளமாக பயணித்துள்ளார்.

பெரிய மீசையுடன் கம்பீரமான தோற்றத்தில், பணக்கார

கம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் எண்ட்ரி கொடுக்கும்

பரத், தனது வயதுக்கு மீறிய வேடம் என்றாலும் அதை சிறப்பாகவே செய்துள்ளார்.

குறிப்பாக கடைசி காட்சியில் மகளின் காதல் பற்றி அவர்

பேசும் வசனங்கள், ஆணவக்
கொலைகளுக்கும், நாடக காதல்

என்ற பொய் பிரச்சாரம்

செய்பவர்களுக்கும் சம்மட்டி அடியாக அமைந்திருக்
கின்றன.

கம்யூனிச போராளியாக நடித்துள்ளார். ரித்தேஷ்,

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார் .

பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி

பி.கே.மேதினி, அதர்ஷ், ஆய்ஷ்விகா என மற்ற

கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்
களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

கவியரசுவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம் இல்லை இருந்தாலும்,

கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம்

கடத்தும் வகையில் காட்சிகளை படமாக்கியுள்ளார்.

இசையமைப்பாளர்
கள். எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன்,

சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது

இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி

இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்
கின்றது.

எழுதி இயக்கியிருக்கும் அனில் வி.நாகேந்திரன்,

பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை

உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்துள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவு, பிரமாண்டமான

காட்சியமைப்புகள், பிரமிக்க வைக்கும் வகையில் எடுத்தது போன்ற

மாயாஜாலங்கள் இல்லை என்றாலும், ஒரு புரட்சிகரமான தலைவரைப் பற்றிய

புத்தகம் படித்த அனுபவத்தை கொடுக்கும் விதமாக படத்தை

உண்மையாகவும், உணர்வுப்பூர்வமா

கவும் இயக்கியிருக்கும் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன், போராட்டமே அனைத்து

பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

படம் பார்த்தத்தில், “வீரவணக்கம்” நம் நாட்டின் புரட்சி முழக்கத்தின் வீர

வரலாற்றின் வெற்றி முழக்கம். அனைவரும் ஒவ்வொரு தேசிய பற்றுள்ள மனிதனும்

பார்க்க வேண்டிய சிறந்த படம் அனைவரும் பார்த்து கண்டுகளிக்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *