மைதான் திரை விமர்சனம் !!
1951 முதல் 1962 வரை இந்திய கால்பந்து அணியில் பல்வேறு வீரர்களை உருவாக்கி இந்தியாவிற்கு உலக அரங்கில் பெயர் வாங்கி தந்தவர் ரஹீம். இந்த ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வந்துள்ளது அஜய் தேவ்கன் நடித்துள்ள மைதான். அமீத் ஷர்மா இயக்கி உள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்
கல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக இருக்கிறார் ரஹீம். ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் என பல மாநிலங்களிலிருந்து வறுமையில் வாடும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி தந்து இந்திய கால் பந்தாட்ட அணியில் விளையாட வைத்து பல்வேறு வெற்றிகளை குவிக்கிறார் ரஹீம்.ரஹீம் மீது பொறாமை கொள்ளும் கால்பந்தாட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் மாநில ரீதியான பாலிடிக்ஸ் செய்து ரஹீமை கோச் பதவியிலிருந்து நீக்குகிறார். முடிவில் கால்பந்தாட்டு ஆட்டத்தில் கோச்சராக சேர்ந்து வெற்றி பெற ரஹீம் சந்திக்கும் பிரச்னைகளும், சவால்களும்தான் மைதான் படத்தின் கதை
ரஹீம் வாழ்ந்திருந்தால் இப்படிதான் அவமானத்தை சந்தித்திருப்பார், வேதனைபட்டிருப்பார் என்பதை ரஹீமாக வாழ்ந்து காட்டியுள்ளார் அஜய் தேவ்கன். சாய்ராவாக பிரியா மணி கணவனின் வெற்றியை எதிர்பார்க்கும் சராசரி பெண்மணியாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்
ரஹ்மானின் பாடல்கள் இசையும் பின்னணி இசையும் சூப்பர். துஷார் மற்றும் பியோடர் லாயிசின் ஒளிப்பதிவு டைரக்டரின் சிந்தனைக்கு கைகோர்த்துள்ளது.
பீட்டர் தங்கராஜ், துளசி தாஸ், பல ராம், PK என 1950களில் இந்திய கால்பந்தாட்ட அணியில் இடம் பிடித்த வீரர்களை கண் முன் கொண்டு வந்து வீரர்களை பெருமைப் படுத்திவிட்டார் டைரக்டர்.
விளையாட்டு வீரர்களின் வெற்றியையும் தோல்வியையும் விளையாட்டு மைதானம் முடிவு செய்யட்டும். அரசியல் மைதானம் முடிவு செய்ய வேண்டாம் என்ற கருத்தை சொல்லியதோடு
இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த கால்பந்தாட்ட வீரர்களை கண் முன் கொண்டு வந்த டைரக்டருக்கு ஒரு ராயல் சல்யூட். அவசியம் பார்க்க வேண்டிய படம் மைதான்