எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்கத் தயாராக உள்ளது!

Share the post

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்கத் தயாராக உள்ளது!

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ். மன்சூர், தமிழ்த் திரையுலகில் திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்துடன் நல்ல தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் சரியான மேக்கிங் மற்றும் முன்னேற்றத்துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. இதற்கிடையில், தயாரிப்பு நிறுவனம் தனது இரண்டாவது தயாரிப்பான ‘சிரோ’வைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. இது ஒரு தனித்துவமான கதையுடன் பார்வையாளர்களுக்கு அற்புதமான ஒரு அனுபவத்தை வழங்க இருக்கிறது.

முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இந்த ஃபேண்டசி படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படம் மூலம் பிரார்த்தனா சாப்ரியா அறிமுகமாகிறார்.

விவேக் ராஜாராம் கூறும்போது, ​​“நான் மன்சூர் சாருக்கும் அப்துல் சாருக்கும் ஸ்கிரிப்டை சொன்ன போது, ​​இருவருமே தனித்துவமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் ஈர்க்கப்பட்டனர். ஸ்கிரிப்ட்டின் மீது நம்பிக்கை வைத்த இருவருக்குமே எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் மூலம் தனது மகள் பிரார்த்தனாவை நடிகையாக அறிமுகம் செய்ய வைத்த மீனா சாப்ரியா மேடம் அவர்களுக்கும் எனது நன்றிகள்”.

‘சிரோ’ படத்தின் தலைப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி அவர் கூறும்போது, ​​“’சிரோ’ ஒரு கற்பனையான கதாபாத்திரம் – பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தேவதை. நான் முதன்முறையாக பிரார்த்தனாவைச் சந்தித்தபோது, ​​அவர் இந்த கதாபாத்திரத்திற்கு வலுவாக நியாயம் செய்வார் என்று உணர்ந்தேன். மேலும், அவரது தாயார் அவரை இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மேலும் இயக்குநர் விவேக் தொடர்ந்து கூறும்போது, ​​“பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற காம்ப்ளக்ஸ் சப்ஜெக்ட்டை படம் கொண்டுள்ளது. படம் ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் வராது. ஒவ்வொரு 20-25 நிமிடங்களுக்கும் களம் மாறிக்கொண்டே இருக்கும். பெண்கள் அடிப்படையிலேயே மிகப்பெரிய சக்தியைக் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தனித்துவமான குணத்தைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை இந்தப் படம் மூலம் முன்வைக்க முயற்சி செய்துள்ளேன்”.

‘சிரோ’ படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

இப்படத்தை மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப குழு

ஒளிப்பதிவு: கிஷன் சி.வி,
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா,
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சிவகுமார்,
நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான்,
விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *