” 7 ஸ்டார் பாய்ஸ் ” – திரை விமர்சனம் :-

Share the post

” 7 ஸ்டார் பாய்ஸ் ” – ‘ ‘மஸ்ட் வாட்ச் ஃபேமிலி என்டர்டெய்னர் ‘
திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
உலகின் பழமை வாய்ந்த தலை சிறந்த ஆட்டம் தான் கால் பந்து விளையாட்டு கைகளைத் தவிர்த்து தலை மற்றும் உடலின் பாகங்களின் மூலம் பந்தை எதிரணியின் முன் கோல் போடும் ஆட்டம் தான் கால்பந்து விளையாட்டு .

ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரை வித்தியாசமான கோணத்தில் அணுகி இருக்கும் 7 ஸ்டார் பாய்ஸ் .

கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கால்பந்து விளையாட்டு மீது அவர்களுக்குத் தனி ஆர்வம்.மிகுந்த ஈடுபாடு !

அந்த ஏழு சிறுவர்கள் உள்ளூர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு தத்தம் திறமைகளைக் காட்டி சாதிக்கின்றனர்.

சாதனையாளர்களுக்கு சோதனைகள் வருவது இயல்பு . அந்தச் சோதனை இவர்களுக்கும் வருகிறது. பிரச்சினைகளும் பின் தொடர்கிறது. சோதனைகளை சாதனைகளாக்குவது எப்படி ? எதிர்வரும் பிரச்சினைகளை இவர்கள் எப்படி சமாளிக்கின்றனர் . இவர்களுக்கு உறுதுணையாக நின்று தோள் கொடுத்தவர்கள் யார் யார் என்பதனை வெள்ளித்திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாமே !

பரபரப்பாக படத்தினை சுறுசுறுப்பாக இப் படத்தினை இயக்கி இருக்கின்றார் இயக்குநர் நிகில் பிரேம் ராஜ்.

இளம் விளையாட்டு வீரர்களுக்கு முறையாக பயிற்சி அளிப்பவராக பயிர்ச்சியாளராக நடித்திருப்பவர் இந்திய கால்பந்து சாம்பியன் ஐ.எம்.விஜயன். படத்தின் இறுதியில் உண்மையான கால்பந்து போட்டியை நேரில் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டிருப்பது இளைஞர்களை நாமும் மனமாற பாராட்ட வேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது…

படத்தின் பலம் இறுதிக் காட்சியில் தோன்றும் அரைமணி நேரக் காட்சியே…

7 ஸ்டார் பாய்ஸ் என்ற பெயரில் குழுவாக வருகிற சிறுவர்கள் லுக்மான் அவரான் , பாலு வர்க்கீஸ் , அமல் போன்றவர்கள் தன்னுடைய இயல்பான நடிப்பால் தனி முத்திரையைப் பதித்திருக்கின்றனர். இவர்களின் துள்ளலான நடிப்பு படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ..

கதைநாயகனாக வலம் வருபவர் சிறுவன் தனிஷின் உணர்வுகளைப் பிரதிப்பலிக்கின்ற முகபாவங்கள் மக்கள் மனத்தில்இடம் பிடிக்கிறது என்றுச் சொன்னால் இது மிகையாகாது.

ஆண்டனி வர்கீஸ் துடிப்பான இளைஞனாக தன் நடிப்பின் மூலம் அதனை நிரூபணம் செய்து இருக்கின்றார். சிறுவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து சாம்பியன் ஆவதற்கு உதவும் வேடத்தில் எனர்ஜிடிக்கான நடிப்பைக் காட்டியிருக்கின்றார்.

காதல் காட்சி நேரம் குறைவு இருப்பினும் படத்திற்கு அழகு சேர்த்திருக்கின்றன.

கண்ணால் பேசி காதல் மொழியை வெளிப்படுத்தி காதலியாக ஜூமானா அப்துல் ரஹ்மான் இரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார்.

கதைக்கு பொருத்தமாக துணை நட்சத்திரங்களை பயன்படுத்தி இருப்பது இயக்குநரின் தனித் திறமை.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இசையமைப்பாளர் :-
ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவான ஓடி பாஞ்சோடி , சந்திரனைக் கடத்தி போன்ற பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. படத்தின் பின்னணி சேர்ப்பு மிக அருமை.

ஹிஷாம் அப்துல் வஹாப் இசையில் அல்லாவைப் போற்றும் யா அல்லாஹ் என்ற பாடல் உற்சாகத்தைத் தருகிறது…

ஒளிப்பதிவாளர் :-
இயக்குநரின் எண்ணங்களை தன் வண்ணக் காமிரா மூலம் படம் பிடித்துக் காட்டுபவர் ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவாளர் ஃபயஸ் சித்திக்கின் வண்ண ஒளிப்பதிவு கண்ணை கவரும் விதமாக அந்தக் கிராமத்தின் இயற்கை காட்சிகள் , பசுமை மிக்க காட்சிகள், விளையாட்டு மைதானம் உட்பட தன் படப்பிடிப்பின் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கக் கூடியது. பாராட்டக் கூடியது . ஒளிப்பதிவாளரை மனதார பாராட்டலாமே !

இந்தப் படம் உலகக் கோப்பை கால் பந்து போட்டிகள் நடைபெற்ற போது வெளியிட்டு இருந்தால் நிச்சயம் பெரிய அளவில் சாதனைப் படைத்திருக்கும்.

கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார் இப் படத்தின் இயக்குநர் நிகில் பிரேம் ராஜ்.

இயக்குநர் :-
சிறுவர்களை வைத்து வித்தியாசமாக படத்தினை எடுத்திருக்கின்றார் இயக்குநர் நிகில் பிரேம் ராஜ்.

சாதிச் சண்டை இல்லை. வன்மம் இல்லை.கால்பந்து விளையாட்டையே மனத்தில் கொண்டு அருமையாக திரைக்கதையை அமைத்து திறமையாக இயக்கி மக்கள் மனத்தைக் கவரும் இவரை பாராட்டுவோம்.

7 ஸ்டார் பாய்ஸ் – மஸ்ட் வாட்ச் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் சிறுவர்கள் தான் ஹீரோக்கள். படத்தினை தாறுமாறாக எடுக்காமல் மிகத் தெளிவாக திட்டமிட்டு படத்தினை எடுத்திருப்பது பாராட்டியே ஆக வேண்டும். எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று ஆய்வு செய்து நல்லதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுபவர் உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ஓகே டேக் ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *