4 இடியட்ஸ் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
நகைச்சுவை உணர்வைத் தூண்டக் கூடிய எந்த படமானாலும் எந்தக் காலத்திலும் , எந்த சூழ்நிலையிலும் அந்தத் திரைப்படம் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கும். அதுவே வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
இனி கதைக்கு வருவோம்.
கதையின் போக்கு :-
கடற்கரை பங்களா ஒன்று. இந்தப் பங்களா மருத்துவர் வின்சென்ட் அசோகன் என்பவருக்கு சொந்தமானது. இந்தப் பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் அங்குப் பதுக்கியிருப்பதாக அரசுக்கு தெரியுமோ தெரியாதோ நான்கு திருடர்களுக்கு தெரிந்து விடுகிறது. திருட்டு என்பது ஒன்றும் புதிததல்ல .அது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. ஐவகை நிலங்களில் ஒன்று பாலை. மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை என்பர் இலக்கண நூலார். பாலை நிலத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே ! இவர்களின் தொழில் வழிபறி செய்வது அந்த வரிசையில் இந்த நால்வரும். யார் அந்த நால்வர்கள். புகழ் , கும்கி அஸ்வின் , திடியன் , இந்திரன் இவர்கள் தான். இவர்கள் தான் அந்தப் பங்களாவில் புகுந்து அங்கு உள்ள பல கோடிக் கணக்கான பணத்தினைக் கொள்ளையடிக்க திட்டம் போடுகின்றனர்.
கொள்ளையடிக்க இந்த நால்வரும் அந்த பங்களாவில் நுழைய முயற்சிக்கும் போது அந்தப் பங்களாவின் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
சிக்கிக் கொண்ட இந்த நால்வரும் ராணுவ ரகசியம் மாதிரி பங்களாவின் காவலாளி ரவி மரியாவிடம் ஓர் ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இதற்கிடையில் அந்தக் கடற்கரை பங்களாவின் உரிமையாளரான வின்சென்ட் அசோகன் பற்றியும் , அந்தப் பங்களாவின் காவலாளி பற்றியும் இந்த நால்வருக்கும் ஓர் உண்மைத் தெரிய வருகிறது. அச்சத்தில் உறைந்து போன இந்த நால்வர்கள் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தப்பித்துக் கொண்டார்களா ? அந்தப் பங்களாவின் உரிமையாளரின் சுய ரூபம் என்ன ? அவருக்கு உடந்தையாக இருக்கும் அந்தப் பங்களாவின் காவலாளி ரவி மரியாவின் சுய ரூபம் என்ன ? என்பதனை நகைச்சுவை உணர்வோடு கதையைக் கொண்டு போவதே 4 இடியட்ஸ் திரைப் படத்தின் கதைப் போக்கு.
திரைப்பட நட்சத்திரங்கள் :-
நகைச்சுவை நடிகனாக அறிமுகமான புகழ் இந்தப் படத்தில் கதாநாயகன் என்ற அந்தஸ்த்துடன் உள்ளே நுழைகிறார். பார்வையாளர்களின் மத்தியில் இவருடைய சாகசம் எடுபடவில்லை. தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை என்ற பெயரில் பெயர் வாங்கிய இந்தப் புகழ் சினிமாவில் பெயர் வாங்கவில்லை.
எந்த ஒரு திரைப்படம் ஆனாலும் அந்தத் திரைப்படத்திற்கு ஒரு நல்ல கதையம்சம் கூடிய ஒரு கதை வேண்டும். அந்தக் கதையை அனுபவம் வாய்ந்த திரைக்கதை ஆசிரியரைக் கொண்டு எழுதப்பட்டு அனுபவமும் பயிற்சியும் முதிர்ச்சியும் பெற்ற வசனகர்த்தாவால் அந்த அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப வசனம் எழுதப் படும் எந்தப் படமும் நல்ல படமே .
கதைநாயகனாக ஒரு நடிகன் நடித்து விடலாம். நகைச்சுவை உணர்வை மக்கள் மத்தியில் இடம் பெற வைப்பது கடினம். மற்றவர்களை சிரிக்க வைக்க இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு நடிகனால் மட்டுமே முடியும். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக முடியாது.அதைப்போல நகைச்சுவை நடிகன் எல்லாம் கதைநாயகனாக மிளிர முடியாது. இப்படி இரண்டு கெட்டான் சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு அவஸ்த்தைப் படுகிறார் புகழ்.
நகைச்சுவை நடிகனுக்கு டைமிங் டெலிவரி நாலேட்ச் வேண்டும். சிரிக்க வைக்க சிந்திக்கும் திறன் வேண்டும். வசனங்களை டைமிங் டெலிவரி பண்ணத் தெரிய வேண்டும். சிந்திக்கத் தெரிய வேண்டும்.அதற்கு முன்னோடியான நகைச்சுவை நடிகர்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
பழைய படங்களில் நகைச்சுவை நடிகர்கள் பட்டாளமே உண்டு. நகைச்சுவை நடிகர்களுக்கு பிரித்தேக நகைச்சுவை எழுத்தார்களும் உண்டு. அதனால் அந்தக் கால படங்கள் பல வெற்றிப் பெற்றன. முன்னோடிகளின் அடிச்சுவடுகளை பின்பற்றி அதன்படி நடக்க வேண்டும்.
துணை நட்சத்திரங்கள் :-
கும்கி அஸ்வின் , திடியன் , இந்திரன் இவர்கள் நடிக்க முயற்சி செய்து நகைச்சுவையில் தோற்றுப் போனார்கள்.ரவி மரியாவிற்கு நகைச்சுவையே வராது அவர் ஏன் நகைச்சுவை என்ற பெயரில் இம்சையரசனாக இருக்கின்றார்.
வின்சென்ட் அசோகன் தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி தன்னை தக்க வைத்திருக்கிறார்.
கவர்ச்சிப் பாடல் ஒன்று படத்தில் வைத்திருக்கின்றனர் மக்களை குஷிப்படுத்த பிரக்யா நயனை பயன்படுத்தி இருக்கின்றனர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :-
யு.கே. செந்தில்குமார். இவர் இயக்குநரின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு கதைக்கு ஏற்ப காட்சிமைப் படுத்தியதை வெள்ளித் திரையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் தன்னுடைய வண்ண ஒளிப்பதிவால். வியாபார உத்தியைத் தெரிந்துக் கொண்ட இவர் கண்ணுக்கு குளிர்ச்சியாக , கதையின் போக்கை அதன் போக்காக விடாமல் கட்டி இழுத்து வெள்ளித் திரைக்குள் நுழைத்து கைத்தட்டலை பெறுகிறார் பாராட்டலாம் ;கரம் தட்டி உற்சாகப்படுத்தலாம்.
இசையமைப்பாளர் :-
சுபாஷ் முனிரத்னம் இசையில் உருவான பாடல்கள் , படத்திற்கு பலம் சேர்க்கும் பின்னணி வணிக ரீதியாக படம் வெற்றிப் பெற கை கொடுத்து இருக்கிறார் இவரை நாம் பாராட்டலாம்.
இசையமைப்பாளர் :-
சுபாஷ் முனிரத்னம் புதிய வரவு மக்கள் மனத்திற்கு இதம் , காதுக்கு இனிமை .இவர் இசையும் இசையில் உருவான பாடல்களும் அருமை. படத்திற்கு வலு சேர்ப்பது பின்னணி இசையே. வணிக ரீதியாக படம் வெற்றுப் பெற கை கொடுத்து உதவி இருக்கிறார்.இவரை நாமும் பாராட்டலாமே !
இயக்குநர் :-
சஜோ சுந்தர் முருகேசன் . இவர் இப்படத்தினை எழுதி இயக்கி இருக்கின்றார்.
பிரக்யா நயன் கதாபாத்திரத்தை பயன்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களை அதிகமாக அவர்களை சித்தரிக்காமல் கதை ஓட்டத்திற்கு பயன்படுத்தி இருக்கலாம்.
ஒரு படத்திற்கு சரியான திரைக்கதை இல்லை என்றால் அந்தப் படம் வெற்றிப் பெறுவது கடினம்.
4 இடியஸ் திரைப்படத்தின் விமர்சனத்தில் நாம் சொல்ல வருவது நகைச்சுவை மக்கள் மத்தியில் கொட்டிக்கிடக்கிறது. அதனைக் கண்டு கேட்டு திரைக்கதையாக மாற்றுங்கள் அதில் கொஞ்சம் கற்பனையை சேருங்கள் நிச்சயம் அந்தப் படம் வெற்றிப் பெறும். எங்களின் பத்திரிக்கை குழு நடுநிலையோடு நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் மறுமுறை சந்திப்போம். என்றும் உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ;