418 திரை விமர்சனம் :-

Share the post

418 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :- மருத்துவக் கல்லூரியில் விடுதியில் அறை எண் 418 இல் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி சொல்லுவதே இதன் கதைக் கரு.

கதையும் கதையின் போக்கும் :-
விவேக் மருத்துவக் கல்லூரி மாணவர். அவனுடைய பெற்றோரின் கனவு தன் மகனை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக தன் சொத்துக்களை விற்று அவனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடுகின்றனர்.

15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரியின் விடுதி மீண்டும் திறக்கப்படுகிறது. ஆனால் 418 ஆவது அறை மட்டும் திறக்கப்படவில்லை . அதற்கான காரணமும் அப்பொழுது புரியவில்லை. மேலும் அந்த விடுதிக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.

விவேக் அறை எண் :- 417 இல் தங்க வைக்கப்படுகிறான். அவனுடன் ரோஹித் என்ற மற்றொரு மாணவனும் தங்கியிருக்கின்றான். ஒரு நாள் நண்பர்கள் கொண்ட குழு ஒன்று தீர்மானம் ஒன்றைப் போட்டு அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முயல்கிறது ! அது என்ன தீர்மானம் ? என நீங்கள் கேட்கலாம். புரிகிறது உங்கள் தவிப்பு என்னவென்று ?

அறை எண் 418 ஐ திறக்க முடிவு செய்கிறது விவேக்கின் நண்பர் குழு. ஆனால் விவேக் மட்டும் தன் அறையிலேயே தங்கி விடுகிறான். மற்ற நண்பர்கள் கொண்ட குழு அறை எண் :- 418 யை திறக்க முடிவு செய்து இறுதியில் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிடுகிறது. அன்று இரவே விவேக்கின் உயிருக்கு ஆபத்து ஒன்று ஏற்பணுகிறது. அதனைத் தொடர்ந்து விவரிக்க இயலாத ஓர் பயங்கரமான காட்சிகளை அவன் காணத் தொடங்குகிறான். ஏன் அந்த அறை பூட்டப்பட்டிருக்கிறது ? அதற்கான காரணம் என்ன ? என்ற கேள்வி மனத்தில் எழுகிறது.அந்த அறைக்குள் இருப்பவர் யார் ? அல்லது எது ? என்ற கேள்வி மனத்திற்குள் எழுகிறது. அந்த விடுதிக்குள் ஏன் பெண்களை நுழைய அனுமதி இல்லை ? அதற்கான காரணம் என்ன ? 15 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த அறை எண் :- 418க்குள் நடந்த சம்பவம் என்ன ? அதன் மர்மம் என்ன ? லண்டனில் இருந்து வந்த சாயேஷா என்ற பெண் ஏன் அந்த நுறைக்குள் நுழைகிறாள் ? அவள் அத்துமீறி உள்ளே செல்கின்றாள்.அதன் பின் என்ன நடக்கிறது ? இன்னொரு சந்தேகம் .தேவிகா என்ற பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் ? எதற்காக ? எப்படி என்ற கேள்விக் கணைகள் தொடுத்தால் நிச்சயமாக தகுந்த பதில் கிடைக்கும். அது எங்கு கிடைக்கும் ? எப்படிக் கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் திரைக்குச் சென்றால் தக்க பதில் தெளிவாக கிடைக்கும் .

திரை நட்சத்திரங்கள் :-
விவேக் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா ராஜ் நடித்திருக்கிறார். ரோஹித் என்ற கதாபாத்திரத்தில் சரண் லக்கராஜூ நடித்திருக்கிறார். சாயேஷா என்ற கதா பாத்திரத்தில் பிரீத்தி பகடலா நடித்திருக்கிறார். தேவிகா என்ற கதாபாத்திரத்தில் சைத்ரா ஆச்சார் நடித்திருக்கிறார்.

இயக்குநர் தன் எண்ணங்களை திரை வடிவில் கொண்டு வந்து இருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக கருத்துகளை மக்களுக்கு சொல்லி அவர்கள் மனத்தில் நிற்கும் இயக்குநர்கள் வரிசையில் இந்தப் படத்தின் இயக்குநர் கீர்த்தன் நாடகௌடா .

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- கீர்த்தன் நாடகௌடா. கொஞ்ச நாளாகவே மர்ம படங்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று.

இயக்குநர் தன் எண்ணங்களை திரை வடிவில் கொண்டு வந்து இருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக கருத்துகளை மக்களுக்கு சொல்லி அவர்கள் மனத்தில் நிற்கும் இயக்குநர்கள் வரிசையில் இந்தப் படத்தின் இயக்குநர் கீர்த்தன் நாடகௌடா .

இசை :- வெங்கி ஜி.ஜி் படத்திற்கு பின்னணி இசை சேர்ப்பு பலம் . பயம் இல்லாமல் படம் பார்க்கலாம் என்பது சிலர் கருத்து. உண்மையில் நம்மை அதிர வைக்கும் படம் .

கதையும் கதையின் பின்னணியும் :-
மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் விவேக் சங்கர் செல்கிறார். அவர் சேரும் அந்த தனியார் மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதனால் அந்த 418 என்னும் அறையை பூட்டி விடுகின்றனர். இவருக்கு அறை எண் 417 ஒதுக்கப்படுகிறது. அந்த அறை எண் 418 ஐ சுற்றியுள்ள அமானுஷ்யமான அதாவது மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் பற்றியும் அதன் பின்னணியில் உள்ள மர்மங்களை இப் படத்தின் கதைநாயகன் எப்படி கண்டு பிடிக்கிறான் என்பதே இந்தப் படத்தின் கதை. அதை எப்படி இயக்குநர் கொண்டு செல்கிறார் என்பதை படத்தைப் பார்த்தால் தெரியும். உளவியல் அடிப்படையில் ஆய்வு மேற் கொண்டால் ஆவி உலகம் , பேய் பிசாசின் அட்டகாசம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம் அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கதையில் நிறைவும் குறைவும் :-
இந்தப் படத்தில் நிறைவு என்பது படத்தின் முன் பகுதியில் படத்தின் ஆரம்பக் காட்சிகளும் கல்லூரியின் பின்னணியின் சூழலும் படத்தை விறு விறுப்பாக கொண்டு போக வைக்கின்றன. முதல் பாதி படம் படு வேக மாக போகிறது. பார்பவர்களை பேச வைக்கிறது.

ஒளிப்பதிவில் முதல் பாதியில் எந்தக் குறையும் வைக்கவில்லை. சவுண்டு டிசைன் திகில் காட்சிகளில் இரத்தத்தை உறைய வைக்கின்றன. சைத்ரா ஜே ஆச்சார் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் சற்று தடுமாறுகிறது கதை அமைப்பு. திரைக்கதையில் சறுக்கல். ஹாரர் கிளிஷேக்களில் படம் வழ வழ…
இறுதிக் காட்சி வலுவான முடிவு சொல்லப்பட வில்லை. படப்பிடிப்புக்கு முன்னரே திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். கோட்டை விட்டு விட்டார்கள்.

418 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு செய்த போது ஹாரர் திரில்லர் படங்களை வழக்கமாக பார்க்க விரும்புவோருக்கு இந்தப் படத்தின் முதல் பாதி பிடிக்கும். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. படம் பார்க்கலாம். குடும்பத்தோடு பார்க்கப் போவது சற்று தயக்கம் தான். படம் எடுக்க நினைப்பவர்கள் வலுவான கதையை தெரிவு செய்து சீரான திரைக்கதை அமைத்து பார்வையாளருக்கு படத்தைக் காட்டினால் சிறப்பாக இருக்கும். எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *