800 திரை விமர்சனம் !!

Share the post

*800 திரை விமர்சனம் !!*

மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்,
தயாரித்து எம்.எஸ்.ஸ்ரீபதி,
இயக்கி மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நரேன், கிங் ரத்னம், நாசர், வடிவுக்கரசி, ரித்விகா, வேலா ராமமூர்த்தி, ஷரத் லோஹிதஸ்வா, வினோத் சாகர், ஹரி கிருஷ்ணன், ரித்விக் திலீபன் மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் 800 .

இலங்கை கிரிக்கெட் நட்சத்திர நாயகன்யா முத்தையா முரளிதரனின்
ஆரம்பகால வாழ்க்கையில் கிரிக்கெட் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து பல சாதனைகளை சந்தித்து !

இறுதி டெஸ்ட் போட்டியில் 800 வது விக்கெட்டை எடுத்ததோடு படத்தை முடிக்கிறார் இயக்குனர் ! .

இலங்கை மலைவாழ் தமிழரான முத்தையா முரளிதரன்,

கிரிக்கெட் யில் உழைத்ததை விட கடுமையான பல போராட்டங்களை சந்தித்து ! அவர் மீதான விமர்சனத்தை எப்படி கையாளினார் , அதில் இருந்து எப்படி வெற்றியும் பல சாதனைகள் படைத்து இருக்கிறார்
விளக்குகிறது .
இப்படத்தின் கதை !

கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
முத்தையா முரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் மதூர் மிட்டல்.

இயல்பாக நடித்திருக்கிறார். எந்த ஒரு பதற்றமும் அல்லது முத்தையா முரளிதரனை தன்னுள் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சி என்று எதையும் தன்னுள் ஏற்றிக்கொள்ளாமல்,

முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலர் வேடத்தில் நடித்திருக்கும் மஹிமா நம்பியார் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

அர்ஜுன ரணதுங்கா வேடத்தில் நடித்திருக்கும் கிங் ரத்தினம், அப்படியே அவரைப் போலவே இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், ஒரு காட்சியில் வந்தாலும், அவர் பேசும் வசனங்களால் கைதட்டல் பெறுகிறார்.

நாசர், வடிவுக்கரசி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, சரத் லோகிதஸ்வா, ஹரி கிருஷ்ணன், வினோத் சாகர், திலீபன், ரித்விக் அனைவரும் அவர்கள் கொடுத்த கதாபாத்திரம் ஏற்ற நடித்திருக்கிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு அனைத்து காட்சிகளும் இயல்பாக இருந்தது .

ஜிப்ரான் இசையும்
பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி அமைத்து கொடுத்திருக்கிறார்.
.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படம் என்றாலும், தனது பந்து வீச்சு விமர்சனம் செய்யப்பட்ட போது அதை அவர் எப்படி எதிர்கொண்டார்,

தன் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க அவர் எத்தகைய கடினமான முயற்சிகளில் ஈடுபட்டார் என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து .

தமிழராக இருந்தாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், விடுதலை புலிகளின் ஆயுத போராட்டத்திற்கு எதிராகவும் இருந்த முத்தையா முரளிதரன், போரினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை, என்ற கருத்தை இயக்குநர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படம் என்பதால் அவருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் படத்தின் காட்சிகள் அமைந்திருந்தாலும், ஒரே ஒரு காட்சியில் வரும் விடுதலை புலிகள் தலைவர் பிரகாரனின் வேடமும், அவர் பேசும் “திருப்பி அடிக்கிறவங்க கிட்ட சொல்லாதீங்க, முதலில் அடிக்கிறவங்க கிட்ட சொல்லுங்க”, “இது ஒரு பகுதி இல்ல தம்பி” போன்ற வசனங்களும் ரசிகர்களின் கைதட்டலால் திரையரங்கையே அதிர வைக்கிறது.

இலங்கையை சேர்ந்த மலையக தமிழராக இருந்தாலும், வாய்ப்பு வசதிகள் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவரான முத்தையா முரளிதரன், கிரிக்கெட் வீரராக உயர்ந்தது பெரிய விசயம் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. அதனால் தான் அவர் பெரிய கிரிக்கெட் வீரரான பிறகு எதிர்கொண்ட விமர்சனத்தையும், அதில் இருந்து அவர் வெற்றிகரமாக மீண்டு வந்து, 800 விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் படத்தின் பிரதானமாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு திரைப்படமாக எந்தவித தொய்வும் இல்லாமல் நகரும் திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் படத்தை முழுமையாக ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில்

800’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *