விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி. அருளானந்து வழங்கும், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஜோ’

Share the post

இதனை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்க, விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி. அருளானந்து தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் பான் இந்திய நடிகரான துல்கர் சல்மான் வெளியிட இதற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.  

உருவாகிறது. படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்காக நான் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன். இதன் காரணமாகவே, வேறு எந்த புராஜெக்ட்டிலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் ஈடுபட முடியாமல் இருக்கிறேன்” என்றார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் சிறப்பான மதிய உணவு கொடுத்தார். இது எங்களை உற்சாகமடையச் செய்த தருணங்களில் ஒன்று”.

மொத்த படப்பிடிப்பும் வெறும் 37 நாட்களில் முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகர் ரியோ ராஜ் பகிர்ந்துகொண்டதாவது, “இதற்கு தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் முழுமுதற் காரணம். எங்களுடைய தயாரிப்பு நிர்வாகி வீர சங்கர் சார் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தினமும் சரியாக பேமெண்ட் கொடுத்து மொத்த படப்பிடிப்பு குழுவையும் உற்சாகப்படுத்தினார். இது சிறந்த அவுட்புட் வர ஒரு காரணமானது”.

சென்னை, ராமேஸ்வரம், ராம்நாடு, பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. முதலாமடை ரயில் நிலையத்திலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது இதில் உள்ள சுவாரஸ்யமான உண்மை. நடிகர் கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்திற்கு அடுத்து பல வருடங்கள் கழித்து ‘ஜோ’ திரைப்படம் மட்டும் தான் இந்த லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

படத்தின் ஜானர் குறித்து கேட்டபோது ரியோ ராஜ் தெரிவித்ததாவது, “’ஜோ’ 100% பார்வையாளகளுக்கு ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக இருக்கும். படத்தின் டீசர் அந்த உணர்வை நிச்சயம் கடத்தும்”

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

இசை: ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்துகுமார்,
ஒளிப்பதிவு: ராகுல் கே.ஜி. விக்னேஷ்,
படத்தொகுப்பு: வருண் கே.ஜி.,
கலை இயக்குநர்:  ABR,
சண்டைப் பயிற்சி: பவர் பாண்டியன்,
தயாரிப்பு கட்டுப்பாடு: எல்.எம். தனசேகர்,
ஒளிப்பதிவு: அபு & சால்ஸ்,
பாடல் வரிகள்: வைசாக் விக்னேஷ் ராமகிருஷ்ணா,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா D’One

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *