ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷல்

Share the post

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடபடுகிறது.

இந்த 10 நாட்களும் செய்ய வேண்டிய பிரசாதங்களை சமைத்தும் நவராத்திரியின் தாத்பரியம் குறித்த அனைத்து விஷயத்தையும் சுவாரஸ்யமாக விளக்கமளிக்கிறார்கள் திருமதி யோகாம்பாள் மாமி, மீரா கிருஷ்னன் , ஜெயந்தி மற்றும் சுபாஷினி ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷலில் .இந்நிகழ்ச்சி தினமும் மதியம் 12.30 மணிக்கும் மறுஒளிபரப்பு மாலை 5.00 மணிக்கும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

                                                     நலன் தரும் நவராத்திரி
நலம் தரும் நவராத்திரி தினமும் மூன்று பகுதிகளாக காலை 11.30 மணிக்கும் மறுஒளிபரப்பு இரவு 7.00 மணிக்கும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

பகுதி 01  – நவராத்திரி மகிமை
லட்சுமி துர்கா சரஸ்வதி வழிபாடுகள் , விரதத்திற்கு உகந்ததாக விளங்குகின்ற நவராத்திரி விழாவில் தேவியரை வழிபட வேண்டிய முறை அவர்களின் ரூபம் என்னென்ன என்பதை சிறப்பாக விளக்கமளிக்கிறார் பைந்தமிழ் புதுகை ச பாரதி

பகுதி 02 – நவராத்திரி நர்த்தனம்
முப்பெரும் தேவியரின் ரூபத்தை தலா மூன்று நாட்களாக பிரித்து பரத கலைஞர்கள் வழங்கும் நாட்டிய நிகழ்ச்சி

பகுதி  03 – கோலாகல கொலு
சிறப்பு வாய்ந்த கோவில்கள் கொலு நேயர்களின் வீடுகளில் வைக்கப்படும் கொலு மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் வீடுகளில் வைக்கப்படும் கொலுக்களின் சிறப்பு பகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *