
“டார்க்” திரைப்பட விமர்சனம்…
( Dark review)…
நடித்தவர்கள்:-
அஜய் கார்த்திக், அஞ்சனா நேத்ரன்,
இந்துமதி,விடிவி.
கணேஷ், மறைந்த கே.பாக்யராஜ்,
நட்டி நட்ராஜ், மணிகண்டன்,
சிபி.சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
கல்யாண் கே.ஜெகன்.
மியூசிக்:-
மனு ரமேஷ்ன்
ஒளிப்பதிவு:-
ரவி சக்தி.
படத்தொகுப்பு :-
கதிரேஷ். அலகேஷ்ன்.
கலை இயக்குனர்:-
சண்முகராஜா.
தயாரிப்பாளர்கள்:-
எம்.ஜி.ஸ்டுடியோஸ்.
5.ஸ்டார் எபிவி.மாறன்.
கணேஷ்பாபு.
இது ஒரு ஹாரர் திரில்லர் மூவி. திரைப்படத்தின்
ஆரம்பத்திலேயே
கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு
குடியிருக்கிற
மூன்று நண்பர்கள் அந்த இளைஞர்களில் ஒருவர், மற்றவர் இருவரை
கொடூரமாக முறையில் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக் கொள்கிறார்.
இந்த சம்பவத்தின் பிறகு அந்த வீட்டில் யாருமே வீடு குடிவராதபடி சூழ்
நிலையில், அந்த வீடு குறைந்த வாடகை என்பதால், அந்த வீடு பற்றிய
உண்மை தகவல் தெரிந்தும் அந்த வீட்டில் குடி வருகிறார்.
நாயகன்
அஜய் கார்த்திக். தைரியத்துடன் அந்த வீட்டில் குடியேறுகிறார்.
அஜய் கார்த்திக், சில நாட்களில் பிறகு அங்கு சில
அமானுஷ்ய விஷயங்கள் எதிர் பார்த்துக் கொண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
இதற்கிடையே, நாயகன் அஜய், தன்னைத் தானே கொடூரமாக தாக்கிக்
கொண்டு இறந்து போக, வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும்
இறந்து போகிறார். இந்த சம்பவ இடத்திற்கு வருகிறார் காவல்துறை
அதிகாரி நட்டி, சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருக்கிற போது, இறந்து
போன அஜய் கார்த்திக் திடீரென்று படுக்கையில் எழுந்து, நட்டியை பார்த்து.
கடுமையாக எச்சரித்து விட்டு மீண்டும் சரிந்து விழுகிறார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி நட்டி, சொல்லுகிறார்
திடீரென்று இந்த சம்பவத்தையும், தனக்கு அறிமுகம்
இல்லாத ஒருவர் தனது பெயரை குறிப்பிடுவதை வைத்துக் கொண்டு
விசாரணையை தீவிரப்படுத்தும் போது பல திடுக்கிடும்
உண்மைகள் தெரிய வருகின்றது. அது என்ன ? , அஜய் கார்த்திக் எதிர்கொண்ட
அமானுஷ்ய சக்தி கொண்ட படைப்புடன் சம்பவங்கள் மற்றும் இளைஞர்களின் மர்ம மரணங்களின்
பின்னணி என்ன ? என்பதை காட்சிக்கு காட்சி திகிலூட்டும்படி சொல்லும் வகையில்
சொல்வது தான் “டார்க்” திரைப்பட கதைக்களம்.
இந்த திகில் உள்ள படங்களை காமெடி ஜானர்க்குள் அடங்கிய தமிழ்
சினிமாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு திகைக்க வைக்கிற
சம்பவஙகள் மற்றும் பயத்தில் நம்மை உறைய வைக்கிற காட்சிகள் என்று
மிரட்டும் இந்த “டார்க்” பார்வையாளர்களை படம் முழுவதும்
படபடப்புடன் படத்தை பார்க்க வைத்திருக்கின்றன.
கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அஜய் கார்திக், பேய் வீடு என்ற உண்மை
தெரிந்தும், தைரியத்துடன் இருந்தாலும், அங்கு நடக்கும் அமானுஷ்ய
விஷயங்களை கண்டு பயம் கொள்ளும்
வகையில், அந்த உணர்வை மிக சரியாக தனது
நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பயத்தை கடத்து
சென்று இருக்கிறார். ஜாலியான இளைஞராக
அறிமுகமானவர், இந்த பேய் வீட்டுக்குள் சென்றதும், நாளுக்கு
நாள் தனது நடவடிக்கையில் ஏற்படும் பயத்தில் சில
மாற்றங்களில் அதனால் ஏற்படுகிற மன ரீதியான அமானசியமான பாதிப்புகளை
தன் நடிப்பில் கனகச்சிதமாக வெளிப்படுத்தி
திருக்கிறார்,
தனதுஅழுத்தமான கதாபாத்திரத்தில்
அளவான நடிப்பின் மூலம் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். நட்டி, வழக்கமான குற்ற வழக்கு என்று
விசாரிக்க தொடங்கி, பிறகு அதன் பின்னணி குறித்து
அறிந்துக் கொண்டு, அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அசத்தலானது.
வீட்டு உரிமையாளராக நடித்திருக்கிறார்.
மறைந்த
கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பில் மற்றும் திரை இருப்பு மூலம் படத்தை
பிரகாசிக்கும்
ஒளிவிடும் விளக்காக ஜொலுத்திருக்கிறார்.
அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி
ஆகியோர் சிறப்பு வேடம் என்பதால், திரைக்கதையுடன் பயணித்து
பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரு வீட்டுக்குள் நடக்கிற
திகில் சம்பவங்கள் என்பதால் ஒளியை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்
கிறார். வெறும்
இருட்டை மட்டும் காட்டாமல், அந்த இருளுக்குள் ஏதோ ஒரு மர்மம்
ஒளிந்திருப்பதை போன்ற ஒரு உணர்வை
எடுத்துள்ளார். குறிப்பாக, குறைந்த வெளிச்சத்தைப்
பயன்படுத்தி காட்சிகளுக்குள் ஒரு வித தவிப்பை உருவாக்கியிருக்
கிறார்
அதை பார்க்கும் பார்வையாளர்
களிடத்தில் மனதில் படபடப்பை ஏற்படும் விதத்தில்
கேமரா காட்சிகளின் கோணங்களை மிக
நேர்த்தியாக படத்தில் பயன்படுத்திருக்
கிறார்.
அனைவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திகில்
படம் வந்துள்ளது இதை அனைவரும் திரையரங்குகளில்
கண்டிப்பாக அவசியம் பார்க்க வேண்டிய “டார்க்” திரைப்படம்.