
” அருள்வான் ” திரைப்படத்தின் திரை விமர்சனம்
கதைக்கரு:-
மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முயற்சிப்பதே இக் கதையின் கதைக் கரு
முன் கதைச் சுருக்கம் :-
மலை வாழ் மக்கள் கல்வியில் , வேலை வாய்ப்பில் இன்னமும் சரியான இலக்கை எட்டவில்லை. அதற்கு அரசும் அரசாங்கமும் உதவி செய்ய அதனை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை இவர்கள் உயர்த்த முயற்சி செய்தார்களா ? என்ற கேள்விக்கு விடையைத் தேடுவதே இந்தத் திரைப்படம்.
ஐவகை நிலங்களுள் ஒன்று குறிஞ்சி நிலம். மலையும் மலையை சார்ந்த இடம். மலை வாழ் மக்கள் இன்னமும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கின்றனர். இதற்கு காரணம் போதிய கல்வி இன்மையே.
இன்று தொழில் நுட்ப வளர்ச்சி மின் வேகத்தில் முன்னேற்றம் கண்டாலும் இன்னமும் வறுமைக் கோட்டின் கீழ் பின் தங்கி வாழும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக மலைவாழ்மக்களை அடையாளம் காட்டலாம்.இதனை இத் திரைப்படத்தின் இயக்குநர் இருளில் இருக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து இருக்கின்றார்.
பழங்குடி மக்களின் இன்றைய நிலையைக் குறித்து ஆய்ந்து தோய்ந்து அதனை திரையில் கொண்டு வந்து இருக்கும் இயக்குநரின் துணிச்சலை , நேர்வழியில் அழுத்தம் திருத்தமாக இவர்களின் நிலையை இத் திரைப்படத்தின் மூலம் உலகிற்கு அடையாளம் காட்டுகின்றார் .
உண்மைச் சம்பவங்களை வணிக ரீதியாக பார்க்காமல் அவர்களின் உணர்வுகளை அவர்களின் கனவுகளை நினைவாக்க முயற்சி செய்து இருக்கின்றார் திரைப்பட இயக்குநர் கணேஷ் விநாயகம்.
தொலை தூர மலை வாழ் மக்கள் வசிக்கும் இடத்தினை தேடிக் கண்டுபிடித்து கதையை நகர்த்துகின்றார். இயக்குநர் கணேஷ் விநாயகம்
பழங்குடி இனத்தில் சிறுமியாக நடித்திருக்கும் கிருத்திகா தன்னுடைய இயல்பான , உண்மையான நடிப்பின் மூலம் அந்தக் கதா பாத்திரத்தின் அழுத்தம் என்ன என்பதனை உளவியில் ரீதியாக நிருபணம் செய்திருக்கின்றார்.
படிப்பில் இருக்கும் ஆர்வம் இதனால் பெற்றோரை பிரிந்து இருக்கும் சூழ்நிலை சிறுமிக்கே உண்டான அச்சம் , பதற்றம் , தவிப்பு , ஏக்கம் என மன உணர்வாலும் உடலால் ஏற்படும் பயத்தாலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர் மனத்தில் ஓர் இடத்தை பிடித்து இருக்கின்றார்.
படிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவோடு படிக்கத் துடிக்கும் இந்தச் சிறுமி. இவளது பொருளாதார வளர்ச்சியின் பின்னடைவு , அடிப்படைத் தேவைகள் , வசதிகள் இல்லாத சூழல் , இருப்பிடம் இவளின் இலட்சியக் கனவுக்கு தடையாக இருக்கிறது.
மாவட்ட ஆட்சியராக அருள்நிதி நடித்திருக்கிறார். மலை வாழ் மக்கள் பின் தங்கி இருக்கும் நிலையைக் கண்டு அதற்கு அடிப்படைத்தேவை என்ன என்பதை ஆய்ந்து மலை வாழ் பிள்ளைகளுக்கு கல்வி வசதி செய்து கொடுக்குன்றார். இவரது முயற்சியால் இந்த சிறுமியின் கற்க வேண்டும் என்ற உணர்வு கல்வி கற்க வேண்டும் என்ற இலட்சியக் கனவு நிறைவேறியதா ? அன்றி கானல் நீராகி போனதா ? என்ற கேள்விக்கு பதில் சொல்லி இருக்கின்றனர் இத் திரைப்பட குழுவினர்.
நேர்மையான மாவட்ட ஆட்சியராக , மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துபவராக மாவட்ட ஆட்சியராகவே வாழ்ந்திருக்கின்றார் அருள்நிதி. தன் அனுபவம் , தன் நடிப்பின் பக்குவம் , உடல் மொழியால் , தன் நடிப்பால் , வாய்மொழியால் சிறப்பித்திருக்கின்றார் அருள்நிதி.
இன்னொரு நாயகன் ஆரவ். தன்னை பழங்குடி மக்களாகவே பாவித்து கடுமையாக உழைத்து திறமையால் உயர்ந்து நிற்கின்றார்.
இப்படத்தின் நாயகி ரம்யா பாண்டியன். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தன் நடிப்பை இரசிகர்களுக்கு கொண்டு சேர்த்து உள்ளார்.இதனால் மக்கள் மனத்தில் இடம் பிடிக்க வாய்ப்பு உண்டு.
திரைக்கு வலிமை சேர்க்க நகைச்சுவை அருமருந்தை தேனாக அள்ளி வழங்க காளி வெங்கட் , ஜான்விஜய் , விடிவி கணேஷ் நடித்திருப்பது படத்தின் வெற்றிக்கு இவர்களின் உழைப்பு மகத்தானது.
நடிகர்கள் :-
அருள்நிதி , ஆரவ் , ரம்யா பாண்டியன் , காளிவெங்கட் , ஜான்விஜய் , வடிவ கணேஷ் , சிறுமி கிருத்திகா மற்றும் பலர்
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- எம். சுகுமார்.
இசை :- ஜி.வி. பிரகாஷ்
படத்தொகுப்பு :- லாரன்ஸ் கிஷோர்
இயக்குநர் :- கணேஷ் விநாயகம்
இவர்களைப் பற்றிய தேன் துளிகள் :-
ஒளிப்பதிவாளர் :- எம்.சுகுமார் மலையின் அழகினை தன் வண்ண காமிரா மூலம் வெளிப்படுத்துகிறார். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையினை அழகாக படம் பிடித்து காட்டி இருக்கின்றார்.
இசையமைப்பாளர் :- ஜி.வி.பிரகாஷ் இசை மழை தேன் மழை இவர் மெட்டுக்கு ஏற்ற பாடல்கள் . மிக அருமை !
பின்னணி இசை சேர்ப்பு மிக அருமை !
படத்தொகுப்பாளர் :- லாரன்ஸ் கிஷோர் :- உண்மைச் சம்பவங்களை அழகாக தொகுத்து திரைக்கதையின் ஓட்டத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றார்.
இயக்குநர் கணேஷ் விநாயகம் :- இவர் மலைவாழ் மக்களின் நலனுக்காக உழைத்திருக்கின்றார். திரைக்கதையில் வலு சேர்த்து மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை படம் பிடித்து காட்டி அவர்கள் மேன்மைக்கு வடிகால இருந்து திரைப்படத்தினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து இருக்கின்றார். இவர் முயற்சிக்கு மனமாதார பாராட்டு !
திரை விமர்சனத்தில்” அருள்வான் ” என்னும் திரைப்படம். மலைவாழ் மக்களின் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அதற்கு சரியான ஒரு தீர்ப்பை சொல்லி படத்தினை முடிப்பது தனி சிறப்பு. படம் பார்க்க வேண்டிய படங்களுள் ஒன்று. நல்ல கருத்தினை யார் சொன்னாலும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும்.எங்கள் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று விமர்சனம் செய்கின்றது. இனி வேறொரு படத்தில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ; ராஜேஷ் ஓகே டேக்
மனதார திருத்தி வாசிக்கவும்