பிப்ரவரி 4, பிரமாண்ட வெளியீடாக பன்மொழிகளில் வெளியாகிறது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் !

Share the post

பிப்ரவரி 4, பிரமாண்ட வெளியீடாக பன்மொழிகளில் வெளியாகிறது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் !

The action packed #VeeramaeVaagaiSoodum Promo Book your tickets now @ https://bit.ly/3up4Qgh#VVSFromFeb4th #Obba @VishalKOfficial @VffVishal @Thupasaravanan1 @DimpleHayathi @thisisysr @srikanth_nb @Kavin_raj15 @vasukibhaskar @iYogiBabu @Ponparthiban @immasterdinesh @HariKr_official @johnsoncinepro @UrsVamsiShekar @ajay_64403 #Vishal

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது

அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ள நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறார் நடிகர் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

இப்படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. வரும் 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழ் நாட்டில் 560க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆந்திராவில் 750க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், கன்னடத்தில் மிக பெரிய வளியீட்டாக 180 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் பிரமாண்ட வெளியீடாக உலகமெங்கும் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *