ZEE5 தமிழ் மெகா ஹிட் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்தது !

Share the post

ZEE5 தமிழ் மெகா ஹிட் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்தது !

தமிழ் மெகா பிளாக்பஸ்டர் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ZEE5 தளத்தில், ஏப்ரல் 13 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !!

தமிழின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கிங்ஸ்டன்” திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த திரில்லர் திரைப்படம், கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்தது. திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற இப்படம், ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம், ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், அந்த ரௌடி, கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான். அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை.

ZEE5 இன் SVOD தெற்கு துணைத் தலைவர் லயோட் சேவியர் கூறுகையில், “
தமிழ் சினிமா இப்போது மிகப்பெரிய வெற்றிப்பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், அட்டகாசமான என்டர்டெயினர் திரைப்படமான, “கிங்ஸ்டன்” படத்தை, எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப்படம், ஒரு புதுமையான களத்தில், அதிரடி திரில்லராக ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்கிறது. இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும், இது போல் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்குவோம்.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது..,
“கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் – கிங்ஸ்டன் துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட ரகசியங்கள், மாய விசயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறான். தமிழ் சினிமா அரிதாகவே சொல்லும் இந்தக்களத்தில், அதிரடி, மர்மம் மற்றும் நாட்டுப்புறக் கதைக்களத்தில் ஒரு புதுமையான கதையை இந்தப்படம் சொல்கிறது. இப்படத்திற்குத் திரையரங்குகளில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது ZEE5 மூலம் இப்படத்தை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவதைக் காண ஆவலாக உள்ளேன்.

இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது…,
இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு. மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தரும் படைப்பு இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஆனால் திரையரங்குகளில் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார். இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ZEE5 மூலம் இப்படம் அனைத்து மக்களையும் சென்றடையவுள்ளது, மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் இப்படம் புதுமையான அனுபவத்தைத் தரும்.

ஃபேண்டஸி கலந்த இந்த அற்புதமான திரைப்படத்தை, ZEE5 இல் பிரத்தியேகமாக ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் கண்டு களியுங்கள் !!

ZEE5  பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

ZEE5 பின் தொடர facebook.com/ZEE5Premium, twitter.com/ZEE5Premium, 
instagram.com/ZEE5PremiumOfficial Social Media Platforms:

பிற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
ஆர்தி அத்வானி | aarti.advani@zee.com | +91 9819029366
யாஷிகா ஷெட்டி | yashica.shetty@archetype.co |+91 7977279834

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *