உலக நாயகன் கமல் ஹாசன் பங்கேற்ற ஜீ தமிழின் ராக்ஸ்டார் கிராண்ட் ஃபைனல் வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு




‘ராக்ஸ்டார்’ பட்டத்திற்காக இசைத்துறையில் ஏற்கனவே சாதித்த சாதகர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி, இறுதிப் போட்டியாளர்களான சத்யன், மகாலிங்கம், பிரியா ஹேமேஷ், ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தங்களது திறமைகளை கடந்த 18 வாரங்களாக இப்போட்டியில் மெருகேற்றி இந்த இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.




இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் (டிஎஸ்பி) தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக நடுவர் குழுவில் பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெற்று இருந்தார். இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு உலக நாயகன் பத்ம பூஷன் டாக்டர் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கிறார். நடிகர் மற்றும் பாடகர் என
தனது பலதரப்பட்ட திறமையால் போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தினார், இது அவரது இசையை நோக்கி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியது மற்றும் புகழ்பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றிய தனது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் . வர்ற ஞாயிறு 26 செப்டம்பர் 2021 அன்று மாலை 6.30 மணிக்கு ராக்ஸ்டார் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் மூன்று மணி நேர ஸ்பெஷல் ஆக ஒளிப்பரப்பாக இருக்கிறது




