
Redmi Note 13 சீரிஸின் சூப்பர் பவர் அறிமுகத்துடன் 2024ஆம் ஆண்டை Xiaomi தொடங்குகிறது. இது இந்தியாவில் மிட் ரேஞ்ச் மொபைல்களை மக்கள் பார்க்கும் மற்றும் பயன்படுத்தும் விதத்தை மாற்றுகிறது.
மூன்று சாதனங்களும் ஜனவரி 10, 2024 அன்று விற்பனைக்கு வந்தன.
புது டில்லி, ஜனவரி 10, 2024: உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான Xiaomi, இந்தியாவில் Redmi Note 13 சீரிஸை வெளியிட்டது, அதன் பிரீமியம் சலுகையுடன் மீண்டும் இது ஸ்மார்ட்போன்களுக்கான புதிய தரநிலையை அமைக்கிறது. Redmi Note சீரிஸின் அம்சங்களைத் தொடர்ந்து விரிவாக்கி, Redmi Note சீரிஸின் பாரம்பரியத்தை உருவாக்குவதன் மூலம் Redmi Note 13 Pro+ 5G மற்றும் Redmi Note 13 Pro 5G ஆகியவை மிகப் பெரிய டிஸ்பிளே, ஃபிளாக்ஷிப்-லெவல் கேமராக்கள் மற்றும் அதிவேக சார்ஜிங் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு போன்ற ஸ்மார்ட்ஃபோன் அம்சங்களை அதிகரிக்க விரும்புவோருக்கு பிரீமியம் மற்றும் ப்ரோ லெவல் அம்சங்களை வழங்குகின்றன. இப்போது வரை மிக மெலிதான வடிவமைப்பில் கிடைக்கக்கூடியது Redmi Note மட்டுமே..
Redmi Note 13 Pro+ 5G ஆனது வெவ்வேறு ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வருகிறது. 8GB+256GB பதிப்பின் விலை INR 29,999, 12GB+256GB மாடல் INR 31,999, மற்றும் 12GB+512GB வகையின் விலை INR 33,999. இந்த விலைகளில் தள்ளுபடிகளோ புரொமோஷன்களோ அடங்கும். மேலும், நீங்கள் ICIC கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தினால், உடனடி தள்ளுபடியாக INR 2000 பெறுவார்கள். மேலும், Xiaomi/Redmi வாடிக்கையாளர்களுக்கு Xiaomi வழங்கும் அறிமுக லாயல்டி சலுகையாக INR 2,500 சிறப்பு போனஸ் உள்ளது. Mi.com, Flipkart.com, Mi Home, Mi Studio மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்ல் பார்ட்னர்களில் இந்தச் சலுகைகளைப் பெறலாம்.
அதேபோல், Redmi Note 13 Pro 5G பின்வரும் தள்ளுபடி விலைகளில் கிடைக்கிறது: 8GB+128GB பதிப்பு INR 23,999, 8GB+256GB மாடல் INR 25,999 மற்றும் 12GB+256GB வகை INR 27,999. இந்த விலைகளில் நடைமுறையில் உள்ள புரொமோஷன்களும் அடங்கும். ICICI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனடியாக INR 2000 பெறுவார்கள். கூடுதலாக, Xiaomi/Redmi வாடிக்கையாளர்கள் INR 2,500 மதிப்புள்ள சிறப்பு அறிமுக லாயல்டி போனஸுக்குத் தகுதி பெறுவார்கள். இந்த சலுகைகள் Mi.com, Flipkart.com, Mi Home, Mi Studio மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்ல் பார்ட்னர்களுக்கு செல்லுபடியாகும்.
Redmi Note 13 5G சீரிஸ் ஆனது பின்வரும் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது: 6GB+128GB பதிப்ப INR 16,999, 8GB+256GB வகை INR 18,999 மற்றும் 12GB+256GB மாடல் INR 20,999. இந்த விலைகளில் தள்ளுபடிகள் அடங்கும், மேலும் இது Mi.com, Amazon.in, Mi Home, Mi Studio மற்றும் ரீடெய்ல் பார்ட்னர்கள் ஆகியவற்றில் கிடைக்கும். நீங்கள் ICICI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தினால், உடனடியாக INR 2000 தள்ளுபடி பெறுவீர்கள். மேலும், Xiaomi/Redmi வாடிக்கையாளர்கள் INR 1,500 மதிப்பின் சிறப்பு அறிமுக லாயல்டி போனஸைப் பெற முடியும். நீங்கள் ஏதேனும் Redmi Note 13 சீரிஸ் ஃபோனை வாங்கினால், Redmi Watch 3ஐ வெறும் INR 1,999க்கு பெறலாம். ஜனவரி 10 முதல், Redmi Note 13 சீரிஸ் Mi.com, Amazon.com, Mi Home, Mi Studio மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்ல் பார்ட்னர்களில் விற்பனைக்கு வரும்.
SuperPowered Redmi Note 13 Pro+ 5G பல்வேறு முதன்மையான அம்சங்களுடன் வந்துள்ளது
Redmi Note 13 Pro+ 5G ஆனது IP68 புரொடக்ஷன் மற்றும் 200MP கேமராவுடன் கூடிய ஆடம்பரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாக்கப்பட்ட அதன் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 120W ஹைப்பர்சார்ஜ் ஆதரவால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 7200-Ultra chip இல் இயங்குகிறது, இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் Dolby Atmos உடன் சிறந்த ஆடியோவை வழங்குகிறது. இது 5000mAh பேட்டரி, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 512 GB வரை ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. நீங்கள் இதை ஃப்யூஷன் பிளாக் மற்றும் ஃப்யூஷன் ஒயிட் வண்ணங்களில் பெறலாம்.
பவர் பேக்டு ப்ரோ சிப்லிங்– Redmi Note 13 Pro 5G
Redmi Note 13 Pro 5G ஆனது Snapdragon 7s Gen 2 ப்ராசஸர் மற்றும் OIS உடன் 200MP கேமராவைக் கொண்ட உலகிலேயே முதன்மையான ஃபோன். இது Dolby Atmos & Vision உடன் வருகிறது. ஃபோனில் 120Hz AdaptiveSync புதுப்பிப்பு வீதத்துடன் 1.5K AMOLED டிஸ்ப்ளே உள்ளது, மேலும் இது ஆர்க்டிக் ஒயிட், மிட்நைட் பிளாக் & கோரல் பர்பில் போன்ற வண்ணங்களில் வருகிறது.
Redmi Note 13 5G – கிளாசிக் ப்ரோவாக மாறுகிறது
Redmi Note 13 5G மெலிதான வடிவமைப்பையும் 108MP கேமராவையும் கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய மிகத் தெளிவான AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் மென்மையான 5G செயல்திறனுக்காக மீடியாடெக் டைமென்சிட்டி 6080 செயலியில் இயங்குகிறது. இது 5000mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. நீங்கள் அதை ப்ரிசம் கோல்ட், ஆர்க்டிக் ஒயிட் மற்றும் ஸ்டெல்த் பிளாக் வண்ணங்களில் பெறலாம். 6GB+128GB வகையின் ஆரம்ப விலை INR 16,999.