நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறப்பான அனுபவம் – இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் !

Share the post

நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறப்பான அனுபவம் – இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் !

தென்னிந்திய திரைப்படங்களை இயக்கிவரும், முன்னணி இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத், விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘இன்மை’ பகுதியில் பிரபல நடிகர் சித்தார்த்தை இயக்கியது, சிறப்பான அனுபவம் என தெரிவித்துள்ளார். “நவரசா” ஆந்தாலஜி படத்தில் பயத்தை வெளிப்படுத்தும் ‘இன்மை’ பகுதியில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை பார்வதி திருவோத்து இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழின் முன்னணி கலைஞர்கள் பலர் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இன்மை உருவாக்கம் குறித்து இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் கூறியதாவது…
“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் பய உணர்வை வெளிப்படுத்தும் கதையில் நான் பணியாற்றியுள்ளேன். பயம் மட்டுமே அனைத்து உயிரனங்களுக்கும் பொதுவான பண்பு. நீருக்கடியில் வாழும் உயிரனம் உட்பட, உலகின் அனைத்து உயிரினத்திற்கும் பயம் என்பது அடிப்படை உணர்வு. இந்த உணர்வை திரையில் காட்ட வழக்க்கமான ஹாரர் அல்லது திரில்லர் கதை கண்டிப்பாக வேண்டாம் என முடிவு செய்தோம். எதிர்பாரா நிகழ்வினால் உருவாகும் சோகமும் அதன் விளைவாக உருவாகும் பயத்தையும் கதையில் கொண்டு வந்தோம். நடிகர் சித்தார்த் அவர்களுடன் இக்கதை குறித்து விவாத்தித்த பொழுது எனக்கும் அவருக்கும் எதிர்பாரா நிகழ்வுகள் மற்றும் ஷேக்ஸ்பியர் ஆகியவற்றின் மீது பொது விருப்பம் இருந்ததை அறிந்தோம். எனது விருப்பமானது King Lear அல்லது Hamlet போன்ற கதையை எழுத வேண்டும் Othello அல்லது Macbeth போன்ற படைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான். இறுதியில், வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை சொல்லும் கதையைச் சொல்ல முடிவு செய்தோம். இது இன்மை பகுதியில் அழகாக வந்துள்ளது என்றார்

“நவரசா” மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம். Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். “நவரசா” Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *