பெரும் எதிர்பார்ப்புடன், அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்படம் – 11:11 Productions தயாரிப்பாளர் Dr.பிரபு திலக் !
11:11 Productions தயாரிப்பாளர் டாக்டர்.பிரபு திலக், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டதன் மூலம், தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில், ஒரு மதிப்புமிகு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தை இன்று (டிசம்பர் 31, 2021) தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.
இது குறித்து டாக்டர் பிரபு திலக், 11:11 Productions கூறும்போது..,
எங்கள் தயாரிப்பு நிறுவனம் எப்போதும் சிறந்த உள்ளடக்கம் கொண் படங்களைத் தயாரித்து வெளியிடுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சமூக அக்கறை கொண்ட கருவுடனும், அழுத்தமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் அட்டகாசமான நடிப்புடனும், உருவாகியுள்ள “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். குறிப்பாக, திரைப்படங்களில் சத்யராஜ் சாரின் சிறப்பான நடிப்பைப் பார்த்து வளர்ந்த நான், அவரது நடிப்பில் இப்படத்தை 11:11 Productions நிறுவனத்தின் சார்பில் வெளியிடுவது மகிழ்ச்சி. இயக்குனர் தீரன், பார்வையாளர்கள் மனதில், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதையை வடிவமைத்துள்ளார். ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்பே அதன் முடிவைக் கணிப்பது வர்த்தக வட்டாரங்கள்தான். காட்சி துணுக்குகள் மற்றும் பாடல்களைப் பார்ப்பதன் மூலம் அவர்கள் படத்திற்கு பார்வையாளர்கள் எத்தகைய வரவேற்பு தருவார்கள் என்பதை எளிதில் கணித்து விடுவார்கள். “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்திற்கு அவர்கள் முழு ஆதரவையும் தந்துள்ளது, படத்தின் வெற்றி மீது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. அவர்களின் ஆதரவிற்கு பெரும் நன்றிகள். இந்த பெருமைமிகு திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க என்னை அனுமதித்த தயாரிப்பாளர் சி.ஆர்.சலீமுக்கு நன்றி.
தீர்ப்புகள் விற்கப்படும் படத்தை இயக்குநர் தீரன் எழுதி இயக்கியுள்ளார், Al-Tari Movies சார்பில் தயாரிப்பாளர் C.R.சலீம் தயாரித்துள்ளார். 11:11 Productions சார்பில் டாக்டர் பிரபு திலக் இப்படத்தை வெளியிடுகிறார். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவில் பிரசாத் SN (பின்னணி இசை மற்றும் இசை), கருடவேகா அஞ்சி (ஒளிப்பதிவு), மோகன் ராஜன் & ஸ்ரீகாந்த் வரதன் (பாடல் வரிகள்), நௌஃபல் அப்துல்லா (எடிட்டர்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), C.S.பாலச்சந்தர் (கலை), S.N.அஸ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி), முகமது சுபேர் (ஆடை வடிவமைப்பாளர்), ப்ளெசன் (வடிவமைப்பு), மற்றும் ராமகிருஷ்ணா – Four Frames(ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.