“யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்”திரைப்பட விமர்சனம்…

Share the post

“யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்”
திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-
பால் ராஜ், காயத்ரி ரேமா, ஸ்வேதா ஸ்ரீ,

ரவி மரியா, அம்பானி சங்கர், பசங்கசிவகுமார்.
மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : –
பால் ராஜ்

மியூசிக் : –
விஜய் பிரபு.

ஒளிப்பதிவு:-
உதயன்.

படத்தொகுப்பு:-
கே.சங்கர்.

தயாரிப்பாளர்கள்:- புரொடக்ஷன்ஸ் – பால் ராஜ்.

குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பொதுவான ஆசைகள்

கொண்ட
கதாநாயகன் பால்ராஜ், அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க வில்லை.

என்று தெரிந்த பிறகு ஆறு குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு

வருகிறார். அவரது ஆறு குழந்தை ஆசைக்கு சம்மதம்

தெரிவித்த உடனே காயத்ரி ரெமாவை மணந்து‌ விடுகிறார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா,

ஒரு குழந்தை போதும், அதற்கு மேல் குழந்தை

வேண்டாம், என்ற முடிவுக்கு வர, பால்ராஜ் மட்டும் ஆறு

குழந்தைக்கு ஆசையை நிறைவேற்றிய தீர வேண்டும் என்பது தான் அவரது இலக்கு உறுதியாகவும் இருக்கிறார்.

இதனால், கணவன், மனைவி இடையே‌ கடுமையான கருத்து வேறுபாடுகள் வருகிறது.

இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்யத்தில்

சுகம் இல்லாமல் தவிக்கும் சுவேதா ஸ்ரீக்கும்,

பால்ராஜுக்கும் இடையே நட்பு ஏற்படுகின்றன.

நாளடைவில் நட்பும் கள்ளக்காதலாக மாற, கணவன்,

மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூன்று பேருடைய வாழ்க்கையும் என்னவாகிறது, என்பது தான்

படத்தின் மீதிக்கதை க்களம்.
எழுதி இயக்கியவர், தயாரித்திருக்கிறார். பால்ராஜ், கதையின்

கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவராக இருப்பதோடு,

அளவான நடிப்பின் மூலம்
கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

மனைவியை கட்டி அணைக்க முயற்சிக்கும் போது, அவர் தள்ளிவிடும் காட்சிகளில் தன்

ஏக்கம் மற்றும் ஏமாற்றத்தை சரியான முறையில் வெளிக்காட்டியிருப்
பவர், மற்றொரு பெண்ணின் நட்பு

கிடைத்த உடன் தன்னுள் ஏற்படும் மனமாற்றம் மற்றும்

அவருடன் காதல் லீலைகள் என்று மனுஷன் படம் பார்ப்பவர்களுக்கு

பொறாமை ஏற்படும் விதத்தில் வலம் வருகிறார்.

கதாநாயகனின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, ஒரு

குழந்தையை பெற்று வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் ஆறு

குழந்தைகள் என்ற கணவரின் பேராசையை நிராகரிக்கும் காட்சிகளில், பெண்களின்

மனதையும், அவர்களது வலியையும் பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சுவேதா ஸ்ரீ, பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதமாக பயணித்திருக்கிறார்.

பார்த்ததும் கவனம் ஈர்க்கும் முகம், அப்பாவித்தனமான பேச்சு என்றாலும்,

அடப்பாவி…என்று சொல்லும் அளவிலான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக

நடித்திருக்கிறார். சுவேதா ஸ்ரீ-க்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்,

என்று சொல்லும் அளவுக்கு அம்மணி வலம் வந்திருக்கிறார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார் ரவி மரியா, தனது

அனுபவம் மிக்க நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருப்பது. பல இடங்களில்

தனது வில்லத்தனம் மூலம் மிரட்டுவது, சிரிக்கவும் வைக்கிறார்.

உதயன் ஒளிப்பதிவு எளிமையாக இருப்பினும்

காட்சிகள் தரமாக படமாக்கப்பட்டிருக்
கிறார்.

விஜய் பிரபு இசையில் பாடல்கள், வசனங்கள் போல்

ஒலித்திருக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

கே.சங்கரின் படத்தொகுப்பு இயக்குநர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக

சொல்லிருக்க வேண்டும் என்றால் கதையில் இருக்கின்றன

கள்ளக்காதல் விவகாரத்தை சுவாரஸ்யமாக

சொல்லி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்
கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் பால்ராஜ், தற்போதைய

காலக்கட்டத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனையை கதைக்கருவாக எடுத்துக் கொண்டு

அதை கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

கதையில் கள்ளக்காதல் விவகாரம் முக்கிய

பங்கு வகித்திருப்பினும், அதை நேர்மையாக, திரைக்கதைக்கு சுவாரஸ்யம்

தரக்கூடிய விதத்தில் கையாண்டிருப்பவர், மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார்

மதுவுக்கு அடிமையானவர்
களால் குடும்பம்

எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதையும், புரிதல் இல்லாத தம்பதியினரால்

குடும்பம் எப்படி திசை மாறி பயணிக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் பால்ராஜ், அதை சிலபல குறைகளோடு சொன்னாலும்,

சுவாரஸ்யமாக சொல்லி படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.

படம் பார்த்தத்தில், “யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்” யார்ரா அந்த

பொண்ணு என்று கேட்க வைக்கிறது இந்த படம் உண்மை யான காதலுக்காக

எங்கும் கதாநாயகன் அவர் பாடுப்பாடும் சவால்கள் எங்கும் இரண்டு பெண்களின் உயிரோட்டம் உள்ள

உணர்வுகளை விளக்கம் கொடுக்கும் திரைப்படம்

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *