ஜெ.துரை
வெப் திரைவிமர்சனம்
வேலன் புரொடக்ஷன் சார்பாக வி.எம் முனிவேலன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வெப்”
இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி,ஷாவி பாலா, சுபப்ரியா மலர், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்
அபிநயா – நிஷா – மஹா மூவரும் நெருங்கிய தோழிகள் மூவரும் ஒரே கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிகிறார்கள் சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை என்றால் வீக் எண்ட் பார்ட்டி என்று குடி – போதை என்று வாழ்கிறார்கள்.
தங்களுடன் வேலை செய்யும் ராகேஷ் மற்றும் அவனது புது மனைவி ஆகியோருடன் வெட்டிங் பார்ட்டி முடிந்து திரும்பும் போது மூவருடன் சேர்த்து ராகேஷ் மனைவியையும் நட்டி நட்ராஜ் கடத்துகிறார்.
ஏன் கடத்தினார்? இந்த மூவர் என்ன செய்தார்கள்? காவல்துறை நட்டியை கைது செய்தார்களா? நட்டி யார்? நட்டி எப்படி கடத்தினார்? கடத்தியவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே வெப் படத்தின் கதை.
மது, போதை என சுதந்திரமாக அலப்பறை பண்ணி திக்குத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட நான்கு பெண்கள் கவர்ச்சியாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர்
நட்டி கதாபாத்திரத்துக்கு ஏற்றார் போல் நடிப்பில் நம்மை மிரள வைத்துள்ளார்
ஷில்பா மஞ்சுநாத் தன் அம்மாவை நினைத்து அழும் காட்சி நம்மை கண் கலங்க வைக்க முயற்ச்சி செய்துள்ளார்
சைக்கோ வில்லனிடம் இருந்து கடத்தப்பட்ட பெண்கள் தப்பிக்க முயற்சி எடுப்பது சண்டை போடுவது சரணடைவது என காட்சிகளுடன் செயற்கையான நடிப்பும் கலந்துள்ளது
ஈவு இரக்கிமின்றி கொடுமைப்படுத்தும் சைக்கோ வில்லன் நட்டியை முதல் பாதி முழுக்க பயமுறுத்த வைத்துக் கொண்டே இருந்தது
படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் திடீரென படத்தில் தோன்றி காமெடி செய்து சென்றுள்ளார்
போதை, ராஷ் டிரைவிங் பற்றி விழிப்புணர்வு பற்றி பேசியிருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் வெப் திரைப்படம் ஒரு திரில்லர் கலந்த கவர்ச்சி படம்