‘நாங்கள்’ திரைப்பட விமர்சனம்…

Share the post

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ்

ராஜு தயாரிப்பில அவினாஷ் பிரகாஷ்

இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை

உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படம் தான்.

‘நாங்கள்’ திரைப்பட விமர்சனம்…

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய ‘நாங்கள்’

திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ்சுப்பையா.

திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

ஏ ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா

குழுவினரை பயன்படுத்தி வேத் ஷங்கர் சுகவனம்

இசையமைத்துள்ள ‘நாங்கள்’ திரைப்படம்

லைவ் சவுண்ட் முறையில் முழுக்க படமாக்கப்பட்டிருக்
கிறது.

திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு,

திரைக்கதைஅமைப்பு மற்றும்இயக்கம்

உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப்படங்களில் பணியாற்றிஇருக்கும்

அவினாஷ் பிரகாஷ் இயக்குநராக

அறிமுகமாகும் திரைப்படம் ‘நாங்கள்’.

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்திருக்கும்

இப்படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு இதன் ஒளிப்பதிவுமற்றும் படத்தொகுப்பையும்

அவினாஷ் பிரகாஷ் கையாண்டுள்ளார்.

மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை

உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான‌

‘நாங்கள்’, ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ
மாமி, மற்றும்

பெங்களூரு உள்ளிட்ட முக்கிய

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு

தரப்பினரின் உளப்பூர்வ பாராட்டுகளை வென்றது

குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, திரையரங்கு

வெளியீட்டுக்கு தயாராகி வரும்

‘நாங்கள்’ திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ்

சுப்பையாவெளியிடுகிறார்.

இயக்குநர் அவினாஷ் பிரகாஷ்,

“பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான

தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை

எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு. படம் மிகவும்

உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாக இதுவரை பார்த்த

அனைவரும் மனமார பாராட்டி இருக்கிறார்கள்.

ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்களும்

வரவேற்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி ஆகியோர் மூன்று குழந்தைகளாக

நடிக்க, அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா எஸ் அவர்களின் பெற்றோராக

நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் ராக்ஸி எனும் நாய் அற்புதமாக நடித்திருப்பதாக

இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் தெரிவித்தார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மற்றும் ‘அழகு குட்டி செல்லம்’ உள்ளிட்ட

படங்களுக்கு இசையமைத்த‌ வேத் ஷங்கர் சுகவனம்

‘நாங்கள்’ படத்திற்கு இசையமைத்
துள்ளார். ஏ ஆர் ரஹ்மான்

பயிற்றுவித்த துபாயை சேர்ந்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ராவை அவர்

பயன்படுத்தியுள்ளார்வேத் ஷங்கர் சுகவனம் இசையில் சுஜாதா நாராயணன்

பாடல் வரிகளில் சைந்தவி பாடியுள்ள கனவே எனும் உள்ளத்தை தொடும்

பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. லைவ் சவுண்ட்

முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது

நாங்கள் படத்தின் கதை 1990 களில், ஊட்டியில் நிகழ்வதாக

சித்தரிக்கப்பட்டு
ள்ளது. ஊட்டியில் வசித்து வரும்,

ராஜ்குமார் (அப்துல் ரஃபே), பத்மா (பிரார்த்தனா ஶ்ரீகாந்த்) பிரிந்து

வாழும் தம்பதியினர். இவர்களின்

குழந்தைகளான கார்த்திக் (மிதுன் வி), துருவ் (ரித்திக் எம்), கௌதம் ( நிதின் டி)

ஆகிய மூவரும், மிகவும் கண்டிப்பான அப்பாவின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.

இவர்களின் தோழனாக கேத்தி (ராக்ஸி) எனும் நாயும் இருந்து வருகிறது. ஊட்டியில் ஒரு பள்ளிக்கூடத்தை

நடத்தி வரும், சிறிய அளவில் விவசாயம் செய்து வரும்

ராஜ்குமார் கரண்ட் பில் கட்ட முடியாத, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத

நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலைக்கு அவர் வர காரணம் என்ன?

தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதை மூன்று சிறுவர்களின்

உணர்ச்சிப் போராட்டத்தை, உணர்வுபூர்வமாக சொல்வது தான்,

நாங்கள் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ் 100 சதவிகிதம்

எல்லாவற்றிலும் சரியாக இருக்க வேண்டும். என நினைக்கும், ராஜ்குமார் என்ற வாழ்ந்து கெட்ட,

விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதரின் கதாபாத்திரத்தில்,

அப்துல் ரஃபே சிறப்பாக நடித்திருக்கிறார். அவர், சிறுவர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அவர் மீது

கடும் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவருடைய சூழல் கரண்ட் பில் கூட கட்டமுடியாத கையறு

நிலையில் அவர் தவிக்கும் காட்சிகள், அவர் மீது பரிதாபத்தினை ஏற்படுத்துகிறது.

ராஜ்குமாரின் மனைவியாகவும், மூன்று சிறுவர்களின் அம்மாவாகவும் பத்மா

கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரார்த்தனா எஸ், சில காட்சிகளில் நடித்திருந்தாலும் கவனம் பெறுகிறார்.

முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் கார்த்திக் (மிதுன் வி), துருவ் (ரித்திக் எம்), கௌதம் ( நிதின் டி) ஆகிய

மூவருமே சிறப்பாக நடித்துள்ளனர். மூத்த பையனாக குடும்ப பொறுப்பினை

ஏற்கும் மிதுன் கதாபாத்திரம் அவர் மீது பரிதாபத்தினை ஏற்படுத்துகிறது.

குறும்புக்கார சிறுவனாக நிதின் டி, தனது அப்பாவின் ஷேவிங் பிரஷ்ஷை, டாய்லெட் தண்ணீரில் முக்கி எடுக்கும் காட்சி, சிரிப்பினை வரவழைத்தாலும்,

கள்ளம் கபடமற்ற, அந்த பிஞ்சு உள்ளத்தின் வெளிப்பாடு, கண்டிப்பான தந்தைகளின் மீது

இருக்கும் கோபத்தினை வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கிறது. கடைக்கு

சென்று வரும் சிறுவன் ரித்திக் எம் நடிப்பும் சிறப்பு தான். மூன்று

சிறுவர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களிடம் சிறப்பான

நடிப்பினை வரவழைத்த, இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் பாராட்டுக்குரியவர்.

கடுமையான பொருளாதார சிக்கலில் தவிக்கும் ஒரு தந்தை,

துள்ளித்திரிந்து விளையாட வேண்டிய வயதில், அம்மாவை பிரிந்து, கண்டிப்பான தந்தையிடம்

சிக்கித்திணறும் மூன்று சிறுவர்கள். அவர்கள் தங்களது

வாழ்க்கையினை எப்படி அமைத்துக்கொள்

கிறார்கள் என்பதை, அவர்களின் உணர்ச்சிப்போராட்டத்தை, சற்றே

இயல்பாக சொல்லியிருக்கிறார், அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ்.

நாங்கள் – வாழச் சொல்லித்தரும் பாடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *