நாங்கள் சகோதரர்கள் மாதிரி! மறைந்த நடிகர் லான்ஸ் ரெட்டிக், தனது சக நடிகரும், நண்பருமான இயன் மெக் ஷேனுடன் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியிருந்தார்
லான்ஸ் ரெட்டிக்கின் கடைசி மற்றும் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய ஜான் விக்: சேப்டர் 4 திரைப்படத்தை பிரத்தியேகமாக லயன்ஸ்கேட் ப்ளே தளத்தில் ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காணத்தவறாதீர்கள்
ஒவ்வொரு அற்புதமான நட்புக்கும் அதைவிட அற்புதமான ஒரு துவக்கம் இருக்கும். சிறந்த நடிகரான மறைந்த லான்ஸ் ரிட்டிக் மற்றும் இயன் மெக் ஷேன் ஆகியோருக்கு இடையே இருந்ததும் அப்படியான ஒரு நட்பு தான். நகைச்சுவையான அவர்களது முதல் உரையாடலிலிருந்து, அவர்களது நட்பு தவிர்க்க முடியாததாகவும், எப்போதும் நினைவில் நிற்கும் ஒன்றாகவுமே இருந்துள்ளது. ஷரோனுக்கும் வின்ஸ்டனுக்கு இடையே இருந்த நட்பைப் போல, லான்ஸ் எப்போதும் இயனுக்கு ஏற்ற ஒரு நபராக இருந்தார். இதன் காரணமாக திரையிலும், நிஜத்திலும் இருவருக்கும் நடுவே நல்லதொரு புரிதல் இருந்தது. ஜான் விக்:சேப்டர் 4 திரைப்படம் வரும் ஜூன் 23 அன்று லயன்ஸ்கேட் ப்ளே தளத்தில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் வெளிவரவுள்ள சூழலில் – லான்ஸ் என்கிற அற்புதமான நடிகருக்கும், அவரது நட்புக்கும் அவரது சொந்த வார்த்தைகளின் மூலமாக அஞ்சலி செலுத்துவதை விட சிறந்த வழி வேறு என்னவாக இருக்க முடியும்!
இயன் மேக் ஷேனுடனான நட்பு குறித்தும், அவருடன் பணியாற்றுவது குறித்தும் பேசிய லான்ஸ் ரெட்டிக், “இயனை நான் முதல் முதலாக சந்தித்தது ஜான் விக்: சேப்டர் 2 திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் தான் என்பது ஒரு வேடிக்கையான விஷயம். அவருக்கு நான் ஒரு ரசிகனாக இருந்தேனே தவிர அவரை அதற்கு முன்பு பார்த்ததில்லை. உண்மை என்னவென்றால், நான் இயனை முதல் முறையாக சந்தித்த போது, எனக்கு மிகவும் தயக்கமாகவும், பேச்சு வராதது போலவும் இருந்தது; அப்போது அவர் மிகவும் சாதாரணமாக – ‘ஹே மேன், எப்படி இருக்க’, என்றார். அதற்கு நான் – ‘ஓ, ஹோ, என்னையா?’ என்பது போல இருந்தேன். ‘என்னாச்சு உனக்கு? நீ ஓகே தான?’ என கேட்டார். (சிரிக்கிறார்) அது தான் நாங்கள் நண்பர்களான தருணம்”, என்றார்.