ஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு வர உள்ளோம்
சூதாட்ட விளம்பரத்திற்க்கு ஆதரவாக நடிக்க கூடிய நடிகர்கள் அதனை ஆடி விட்டு அதற்கு ஆதரவாக விளம்பரம் செய்ய வேண்டும்
விக்கிரமராஜா பேட்டி
சென்னை போரூர் ஆலப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்விஸ் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிழக்கு ஏற்றி திறந்து வைத்தார்..
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பெரிய நிறுவனங்கள் எங்களது வணிகத்தை சூறையாடி கொண்டிருக்கிறார்கள்
கொரோனா காலகட்டத்தில் சாமானிய வணிகர்கள் எப்படி உதவினார்கள் என்பதை நினைவில் பொதுமக்கள் வைக்க வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறோம்
ஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதோடு ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வணிகர் மாநாட்டில் கொண்டு வர உள்ளோம்
கொரோனா தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது மக்கள் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் மீண்டும் ஒரு ஊரடங்கை எதிர்கொள்ள முடியாது
மீண்டும் ஊரடங்கு வந்தால் ஒரு வணிகர் கூட தாக்கு பிடிக்க மாட்டார்கள்
நடிகர்கள் நியாயமான விளம்பரத்திற்கு நடிக்க செல்ல வேண்டும் நடிகர்கள் விளம்பரத்தில் நடித்தால் அதனை குடிக்க மாட்டார்கள் மற்றவர்கள் குடிப்பதற்காக விளம்பரம் செய்வார்கள்
சூதாட்ட விளம்பரத்திற்கு ஆதரவாக நடிக்க செல்லக்கூடிய நடிகர்கள் அதனை ஆடி விட்டு அதற்கு ஆதரவாக விளம்பரம் செய்யலாம் என தெரிவித்தார்.