டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2 புதிய ப்ரோமோ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்





சென்னை, ஜூலை 22,2021:தமிழகத்தின் இளம் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களின் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளுடன் புதிய ப்ரோமோவை இந்த தொலைக்காட்சி வெளியிட்டது. கடந்த சில வாரங்களாக, இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஒரு அமைதியான எதிர்பார்ப்பு உருவாகி வந்தது. இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியைப் பற்றி தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.





தமிழகத்தின் பல கலாச்சார அடையாளங்களை பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள இந்த ப்ரோமோ, பல்வேறு விதமான நடன வடிவங்களைக் காட்டுகிறது, அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை காட்டிலும் உற்சாகமிக்க உணர்வை தூண்டுகின்றன. இந்த புரமோவில் பாரம்பரியமிக்க பாரதநாட்டியம் முதல் ப்ரீ ஸ்டைல் ஏரோபிக்ஸ் வரை, ஒரு சில நடன வடிவங்களின் நுணுக்கங்கள் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இது முதல் சீசனுக்கு பொருத்தமான காணிக்கை செலுத்தும் விதத்தில் உள்ளது. இந்த புதிய ப்ரோமோ கேளிக்கை நிறைந்த, சுறுசுறுப்பான ராப் இசையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் ஒவ்வொரும் தங்கள் கால்களை தரையில் தட்டாமல் இருக்கமாட்டார்கள்.





டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியாகும். இது மிகவும் பிரபலமான டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஆகும். முதல் சீசனில் புகழ்பெற்ற நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இந்த நிகழ்ச்சிக்கான நடுவராக இருந்தார். மேலும் கோலிவுட்டின் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதேபோல் இரண்டாவது சீசனிலும் மக்களிடையே பிரபலமான ஒருவர் நடுவராக வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்.








புரமோவை கீழ்க்கண்ட லிங்க்கில் பார்க்கவும்,
https://www.instagram.com/p/CRlJfu4JlW0/?utm_medium=copy_link