
படப்பிடிப்பை நிறைவு செய்த VR07 படக்குழு
ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள #VR07 திரைப்படம் சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.

வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 05, 2023 அன்று தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 11, 2023 அன்று அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. #VR07 அனைவராலும் விரும்பப்படும் ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வரவிருக்கிறது என்பதையும், படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், டிரைலர் மற்றும் இதர அப்டேட்கள் இன்னும் சில நாட்களில் தயாரிப்புக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.
