தென் மாவட்ட பின்னணியில் சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த்
A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர்

விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.


டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து அதே சமயம் குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.
மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.
கலையை தியாகராஜனும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் கவனிக்கின்றனர்.

சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.



தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு ; S. அலெக்சாண்டர்
இயக்கம் ; வி.பி நாகேஸ்வரன்
ஒளிப்பதிவு ; மாசாணி
படத்தொகுப்பு ;
கலை ; தியாகராஜன்
சண்டை பயிற்சி ; ராஜசேகர்
நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி
டிசைன்ஸ் ; சசி & சசி
மக்கள் தொடர்பு ; A. ஜான்