விகாஸ் நடிக்கும்
“துச்சாதனன்”
தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”!
பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன் தான்! அப்படிப்பட்ட சுயநலவாதியின் கதைதான் இந்த துச்சாதனன்!






படத்தின் நாயகனாக விகாஸ் நடிக்கிறார். இவர் அகிலா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, ஒற்றாடல் போன்ற படங்களில் நடித்துள்ளார்! இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரோகிணி நடிக்கிறார்!
மேலும் இப்படத்தில் லொள்ளு சபா மனோகர், மில்டன் மேடிசன், பிரபு சாஸ்திரி, வேளாங்கண்ணி, சாய் ரோஹிணி, அருண் விக்னேஷ், மில்டன் மேடிசன், விக்னேஷ் வி.எஸ். சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள்!
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு நகைக்கடையில் திருட்டு நடக்கிறது. அந்த திருட்டை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க காவல்துறை களம் இறங்குகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களை, விறுவிறுப்பான கதை, திரைக்கதை, வசனத்தில் இயக்குகிறார் இயக்குனர் தளபதி! ஒளிப்பதிவு பி.வி.பால முருகன், இசை விஜய் பிரபு, எடிட்டிங் வி.எஸ்.விக்னேஷ், சண்டைப் பயிற்சி ராக்கி ராஜேஷ், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்!
படத்தில் மூன்று பாடல்களும் இரண்டு சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.