விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே நடித்த ‘மும்பைகர்’ திரில்லர் படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்
சென்னை, 30, அக்டோபர், 2023: மும்பை நகரம் மற்றும் அதன் பல்வேறு பகுதிகளை மையமாக வைத்து உருவான வழக்கத்துக்கு மாறான திரைப்படமான ‘மும்பைகர்’ திரில்லர் திரைப்படத்தை வரும் நவம்பர் 5-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
மூவி ஆஃப் தி மந்த் தொடரில் ‘மும்பைகர்’ திரைப்படத்தை ராம்ராஜ் காட்டன் ஷர்ட்ஸ், போத்திஸின் தீபாவளி பேஷன் ராக்கெட்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் தமிழ்ப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் திரைப்படமாகும். இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ஹிருது ஹாரூண், ரன்வீர் ஷோரே, தன்யா மானிக்தலா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மும்பையின் பரபரப்பான தெருக்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட மும்பைகர் திரைப்படம், பல்வேறு தொடர்பற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையைப் பின்னிப் பிணைந்து சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர காலகட்டத்தில் நடக்கும் பல நிகழ்வுகளை திடீரென ஒன்றிணைக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் பயணத்தை படம் விவரிக்கிறது.
நகரம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய கதாபாத்திரங்களின் பார்வையை மாற்றும் விதமாக கதை செல்கிறது. அதன் அழுத்தமான கதையுடன், திரைப்படம் பார்வையாளர்களை ஒரு அற்புதமான பயணத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், இந்தியாவின் கனவுகளின் நகரத்தின் அதிகம் அறியப்படாத பக்கங்களைக் காண்பிக்கும் என்றும் படம் உறுதியளிக்கிறது. ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ரியா ஷிபு ஆகியோர் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
படம் குறித்து நடிகர் விக்ராந்த் மாசே கூறும்போது, “விஜய் சேதுபதி சாருடன் படத்தில் இணைந்து நடித்ததில் முழு மகிழ்ச்சி அடைகிறேன். நான் சந்தோஷ் சிவன் சார் படங்கள் பார்த்து வளர்ந்தவன். நான் எப்போதும் அவருடைய பணிகளை, படங்களைப் பாராட்டியிருக்கிறேன். இப்போது அவருடைய இயக்கத்தில் நான் நடித்திருப்பது என்றென்றும் போற்றும் அனுபவமாக இருந்தது. எங்கள் சூப்பர் ஜோடியை தமிழக மக்கள் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
மும்பைகர் திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறும்போது, “இந்திய நடிகர்களுக்கு இது ஒரு உற்சாகமான நேரமாக இருக்கிறது. பல்வேறு மொழிப் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் எங்களுக்கு வருகின்றன. வெப் சீரிஸில் நான் நடித்ததற்காக மக்களின் அன்பு, பாராட்டுகளை பெற்றுள்ளேன். இந்த திரைப்படம் எனது முதல் இந்தி திரைப்பட அறிமுகமாக அமைந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியாவதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கருத்துகளை நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் அதை விரும்புவார்கள் மற்றும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
வெற்றிகர இயக்குநர் சந்தோஷ் சிவன் கூறும்போது, “மீண்டும் ஒரு ஹிந்தி படத்தை இயக்கியது ஒரு பெரிய உணர்வாக அமைந்துள்ளது. மும்பைகர் திரைப்படம் என்பது ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் மூலம் நகரத்தின் கண்ணோட்டத்தைத் தரும் படமாகும். மும்பை மாநகருக்கு என்று அதன் சொந்த தனித்துவம் உள்ளது. அதை இந்தப் படத்தின் மூலம் இணைக்க முயற்சித்தேன். திறமையான நடிகர்களுடன் ஒரே படத்தில் இணைந்தது ஆச்சரியமாக இருந்தது. நவம்பர் 5-ஆம் தேதி இந்தத் திரைப்படம் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாவதை நான் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறேன்” என்றார்.
விஜய் சேதுபதியின் பார்வையில் இருந்து மும்பைகர் கதையைச் சொல்லும் சென்னபட்னா டாய்ஸுடன் ஒரு சிறப்பு விளம்பரம் இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது வைரலாக பரவி, படத்தின் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முதல் முறையாக கலர்ஸ் தமிழில் உங்கள் குடும்பத்துடன் இந்த அற்புதமான படத்தைப் பாருங்கள்!
விளம்பர இணைப்பு: https://www.instagram.com/reel/CzIhmqCMpCk/?igshid=MzRlODBiNWFlZA==
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க்குகளிலும், டிடிஎச் பிளாட்பார்ம்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (சானல் எண் 128), டாடா ஸ்கை (சானல் எண் 1515), ஏர்டெல் (சானல் எண் 763), டிஷ் டிவி (சானல் எண் 1808), வீடியோகான் டி2எச் (சானல் எண் 553) ஆகியவற்றிலும், ஜியோ சினிமா டிஜிட்டலிலும் இதைக் காணலாம்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி குறித்து:
வயாகாம் 18 நிறுவனத்தின் அங்கமான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு சேனல் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் ரசிகர்ளை மகிழ்விக்கும் விதமாக தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த தொடர்களைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊக்குவித்தல், கொண்டாட வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஸ்டீரியோடைப் நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல், முற்போக்கு எண்ணம் கொண்ட நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தல், சமகால நிகழ்ச்சிகளை நடத்துவதில் கலர்ஸ் தமிழ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
வயாகாம்18 குறித்து:
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு நெட்வொர்க் நிறுவனங்களில் வயாகாம்18 மீடியா தனியார் நிறுவனமும் ஒன்று. பல்வேறு தளம், பல தலைமுறை மற்றும் பல்வேறு கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வரும் தளமாக வயாகாம்18 மீடியா உள்ளது. வயாகாம் 18 இந்தியாவில் பொழுதுபோக்கை வரையறுக்கிறது. ஆன்-ஏர், ஆன்லைன், தரைவழி, சினிமாக்கள் மற்றும் வணிகப் பொருட்கள் மூலம் மக்களின் வாழ்க்கையைத் தொடுகிறது வயாகாம்18. பொது பொழுதுபோக்கு, திரைப்படங்கள், விளையாட்டு, இளைஞர்கள், இசை மற்றும் குழந்தைகள் வகைகளில் 38 தொலைக்காட்சிகளைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள நுகர்வோரை மகிழ்விக்கிறது. வயாகாம்18-ன் ஓடிடி இயங்குதளமான ஜியோசினிமா இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும், நேரலை விளையாட்டுகளுக்கான மிகவும் பிரபலமான தளமாக உள்ளது. வயாகாம்18 ஸ்டூடியோஸ் இந்தியாவில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பிராந்திய அளவிலான திரைப்படங்களை வெற்றிகரமாக தயாரித்து விநியோகித்துள்ளது.