சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். கடைசியாக கெளதம், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் உடன் கைக்கோத்து தயாரித்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமான ‘ஜெர்ஸி’ தேசிய விருது வென்றது. இதில் நானி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வெற்றிப் பெற்றது.
இருக்கும் எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் விஜய் தேவரகொண்டா தனது நடிப்பு பயணத்தில் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். போஸ்டரில் நீருக்கு நடுவே பற்றி எரியக் கூடிய கப்பல் ஒன்று பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
இந்தப் படம் குறித்தான அறிவிப்பு பற்றித் தயாரிப்பாளர் எஸ் நாக வம்சி பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் உண்டு பண்ணக்கூடிய அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பு என்று நாங்கள் சொல்லப் போவதில்லை. ஆனால், நிச்சயம் இது வித்தியாசமான படைப்பாக இருக்கும்” என்றார்.
கௌதம் தின்னனுரி, ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தனது தகுதியை நிரூபித்திருக்கிறார். 2019ல் வெளியான அவரது ‘ஜெர்ஸி’ தெலுங்கில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த எடிட்டிங் பிரிவுகளில் விருதுகள் வென்றது.
மெண்ட்ஸ் தரமான படங்களை திறமையான நடிகர்கள் மூலம் கொண்டு வந்துள்ளனர். அந்த வகையில், விஜய்யுடன் இவர்கள் முதன் முறையாக இணைந்துள்ள படம் எப்படி வர இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. விரைவில் தொடங்க உள்ள இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.