

அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, வயகாம் 18 ஸ்டுடியோஸ் – ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்
வசீகரமான நடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகாவும் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்டும் இணைந்து தயாரிக்கின்றனர்.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்குகிறது.
தொழில்நுட்பக் குழு விவரம்
தயாரிப்பாளர் – ஸ்ரீனிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ்
இயக்குநர் – ஆர். கார்த்திக்
ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
இசை – கோபி சுந்தர்
கலை – எஸ் கமலநாதன்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் – S.வினோத் குமார்
ஆடை வடிவமைப்பு – நவதேவி ராஜ்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)