“வேலன்” ஒரு அழகான குடும்ப திரைப்படம் – நடிகர் ப்ராங்ஸ்டர் ராகுல் !




இணையத்தில் தனது புதுமையான மற்றும் பெருங்களிப்பு தரும் குறும்பு நிகழ்ச்சிகளுக்காக பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ப்ராங்ஸ்டர் ராகுல். பெரிய திரைகளில் தோன்றியதன் மூலம் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்கும் அதிர்ஷ்டம் அவருக்கு கிடைத்துள்ளது. வேலன் திரைப்படத்தில் மிக முக்கிய பாத்திரம் கிடைத்ததில், நடிகர் முகன், சூரி மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகிய முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் பெரு மகிழ்ச்சியிலுள்ளார்.



ப்ராங்ஸ்டர் ராகுல் கூறும்போது.., “
“வேலன்” படத்தில் எனக்கு இவ்வளவு முக்கியமான கதாபாத்திரம் கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. படப்பிடிப்பு முழுவதுமே கூத்தும், கும்மாளமுமாகவே இருந்தது. சூரி சாரின் அற்புதமான நகைச்சுவை உணர்வு எங்களை முழுவதுமாக மகிழ்வித்தது. திரையில் நான் தோன்றும் வகையில் அதிக காட்சிகளைக் கொடுத்த, வேலன் திரைப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், முகென் சிறந்த திறமைகளைக் கொண்ட ஒரு அற்புதமான நபர். ஏற்கனவே குடும்பப் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்த அவர், இந்தப் படத்தின் மூலம் மேலும் உயரங்களுக்கு செல்வார். மீனாட்சி கோவிந்தராஜன், பிரிஜிடா மற்றும் அனைத்து நடிகர்களும் ஒருவருக்கொருவர் நடிப்பிலும், ஆதரவளிப்பதிலும் மிகச் சிறந்தவர்கள். பிரபு சார் ஒரு ஜென்டில்மேன், அவர் ஏன் வயதைக் கடந்த பார்வையாளர்களால் நேசிக்கப்படுகிறார் என்பதை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவர் இயல்பிலேயே மிகவும் கண்ணியமாகவும், அன்பாகவும், நட்பாகவும் இருக்கிறார், இது அவரது திரை கதாபாத்திரங்களின் நேர்மறையை பிரதிபலிக்கிறது. எனக்கு ஒரு அழகான திரைப்படம் மற்றும் கதாப்பாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சார் மற்றும் இயக்குனர் கவின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேலன் ஒரு அழகான குடும்ப திரைப்படம், நிச்சயமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப பார்வையாளர்களுக்கு விருப்பமான திரைப்படமாக இருக்கும்.





இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ள வேலன் திரைப்படத்தை, Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.