
‘வருணன்’ திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் : ‘டத்தோ ராதா ரவி , சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயபிரகாஷ்,
கேப்ரில்லா, ஹரிப்ரியா,
சங்கர்நாக்,விஜயன்,
பிரியதர்ஷன் ,ஜிவா ரவி, மகேஸ்வரி , அர்ஜுனா கீர்த்தி வாசன்,
ஹைட்கார்த்தி,கெளசிக், கிரண்மயி , ஐஸ்வரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்கள்
டைரக்ஷன் :- ஜெயவேல் முருகன்.
மியூசிக் :- போபோ சசி.
ஒளிப்பதிவு ;- ஸ்ரீ ராம் சந்தோஷ்
தயாரிப்பாளர் :-யாகைபிலிம்ஸ் –கார்த்திக்
ஸ்ரீதரன் .
சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை
செய்யும் இரண்டு கம்பெனிகள். முக்கிய ஒன்று ஆண்டவர் கேன் வாட்டர் ( ராதாரவி )
தரப்பினருக்கும் ஜான் கேன் வாட்டர்( சரண்ராஜ்) தரப்பினருக்கும் இடையே தொழில்
மூறையில் திடீரென அடிக்கடி சண்டை போட்டி ஏற்படம்.
இரு நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தொழில் செய்து
வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள்.
மறுப்பக்கம் காவல் துறை அதிகாரி தண்ணீர் கேன்
நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமான தொழில் போட்டி, பெரும் பகையாக உருவெடுக்க, அதனால் அவகளது
வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது. என்பதை ‘வருணன்‘.கதைக்களம் சொல்லுகிறது.
தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர் நடித்திருக்கும் ராதாரவி
மற்றும் சரண்ராஜ் தனது அனுபவம் மிக்க நடிப்பிம் மூலம்
படத்திற்கு மிக பெரிய பலமாக இருவரும் சேர்த்துக் கொண்டு போகிறார்கள் .
கதாநாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும்
கதாநாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா
கதாபாத்திரம் ஏற்ப கனகச்சிதமாக உயிர் நடித்துள்ளார்.
அடுத்த கதாநாயகன், கதாநாயகியாக
நடித்துள்ளவரும் பிரியதர்ஷன் , ஹரிபிரியா, ஜோடிகள் வழக்கமான தனது
நடிப்பில் ராயபுரம் சேர்ந்த வாசியாக நடித்துள்ளனர் .
கடைசியில் இருவர்களின் வாழ்க்கையில்
சோகமான வாழ்வியல் துயரம் கண் கலங்க வைத்தது.
வில்லன் பாத்திரத்தில் செம்மையாக சங்கர்நாக்
விஜயன் நடிப்பில் கவனம் ஈர்க்கும்படி வைத்துள்ளார் .
ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவரும்
திரைக்கதைக்கு ஏற்ப பலம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், தனது கேமராவின்
கோணத்தில் காட்சிகளை மிக
வேகமாக மிரட்டி வைத்திருக்கிறார்.
பார்வையாளரை வியக்கும்படி. செய்துள்ளார்.
இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப இசை ,
சில இடங்களில் மிரள வைத்திள்ளது.
இயக்குநர் ஜெயவேல்
முருகன், தண்ணீர் கேன் மையமாக வைத்து திரைக்கதை
அமைந்துள்ள நல்ல விஷயத்தை மக்களுக்கு
தேவையான தண்ணிரை பத்தி எதுவும் சொல்லாமல் , அதுல எந்த ஒரு
முக்கியமான தகவல் படத்தில் வைக்காமல்,
தண்ணீர் கேன் போடும்
ஊழியர்களில் முக்கியமான வாழ்க்கையின் நல்ல
விஷயத்தின் பங்கு என்ன? அதை சொல்லவில்லை .
இளைஞர்களில் வாழ்க்கையில் ஏற்படும்
காதல், திருமணம், அதைப்பத்தி தான் அவர்களுக்குள்
ஏற்படும் மோதல் தான் இருக்கிறது
வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் படத்தில் வரும் முக்கியத்தை
தந்துள்ளார்
இயக்குனர் . ராயபுரத்தில் நடக்கும் தண்ணீர் கேன் போட்டி தான் வருணன் என்ற கதைக்களத்தை
தண்ணீரை பத்தி கொஞ்சம் எப்படி வந்தது என்பதை
தெளிவாக சொல்லியிருந்தால்
இன்னும் சிறப்பாக
இருந்திருக்கும் என்ன இருந்தாலும் தண்ணீர் ஒரு நமக்கு எல்லாம் உயிர் நாடி கடவுள் தான் வருணன்…