அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார்

Share the post

வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் அரசி.

வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி,சிவா மதன்,சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்திருக்கும் இப்படத்தை சூரியகிரண் இயக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு-செல்வா.ஆர் இசை-சித்தார்த் விபின் பாடல்கள்-
ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன்,கானா பிரபா

நடனம்-தீனா
சண்டை பயிற்சி-
மிரட்டல் செல்வா

தயாரிப்பு-
ஏ.ஆர்.கே ராஜராஜா
ஆவடி சே. வரலட்சுமி

இயக்கம் சூரியகிரண்

இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி ஒரு பாடலை எழுதியுள்ளார். நதியே அடங்காதே அணைக்குள் முடங்காதே… என்று பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பாடலை எழுதியிருக்கிறார். இப்பாடல் நிச்சயம் மகளிர் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்படும்.

அண்ணன மிஞ்ச இங்க யாரும் இல்லை…எனும் துள்ளல் இசை பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை கேட்போரை கிறுகிறுக்க வைக்கும். காண்போரை ஆட வைக்கும்.

இப்படத்தில் 6 சண்டை காட்சிகள் அற்புதமாக அமைந்துள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் மிகப் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்திருக்கிறார்கள்.
சண்டை காட்சிகளை மிரட்டி இருக்கிறார் மிரட்டல் செல்வா. தூள் கிளப்பி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

இதன் படப்பிடிப்பு மொத்தம் 55 நாட்களில் சென்னை மற்றும் வேலூர் விஐடி கல்லூரியில் இரவு பகல் பாராது படப்பிடிப்பு நடைபெற்றிருக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *