

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு கொடுத்த வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ்!
நடிகை வரலசுட்மி- நிக்கோலய் சச்தேவ் ஜோடிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழ்த் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் வரலட்சுமி சரத்குமார் தனது குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜூனை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் ஜோடி நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த ஜோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் உரையாடி மகிழ்ந்தனர். இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை கூறி, திருமணத்திற்கு வருவதாகவும் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை வரலட்சுமி பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.