’வணங்கான்’ திரைப்பட விமர்சனம்!
நடித்தவர்கள்:- அருண் விஜய், ரோஷினி பிரகாஷ்,ரிதா, பி.சமுத்திரக்கனி, மிஷ்கின், ரீட்டா,
டாக்டர்.யோஹன் சாக்கோ, அருள்தாஸ், பாண்டிரவி,பாலா
சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா,
சண்முகராஜா, தருண் மாஸ்டர், சேரன் ராஜ், தியாசெந்தில், சாயா
தேவி, கவிதாகோபி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :- பாலா.
மியூசிக் : – ஜிவி.பிரகாஷ்குமார். சாம்.சி.எஸ் .
ஒளிப்பதிவு :- ஆர்.பி.குருதேவ்
படத்தொகுப்பு :-சதீஷ் சூரியா,
சண்டை பயிற்சியாளர்:- ஷில்வா.
தயாரிப்பாளர்கள்:- வி.ஹவுஸ்
புரொடக்சன்ஸ் – சுரேஷ்.காமாட்சி.
பேசும். திறன் மற்றும் கேட்கும் வாய் திறன் இல்லாத ஊமையாக
நடிகர் அருண் விஜய், தனது தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.
பெண்களின் மாற்றுத்திறனாளி காப்பாகத்தில் கிடைக்கும்
வேலைகளை செய்து வரும் அருண் விஜய், தனக்கு கண்ணெதிரில் நடக்கும் எந்த
தப்பு நடந்தாலும், அதை செய்வது யாராக இருந்தாலும்,அதை தட்டிக்கேட்கும் குணமுள்ளவர்
அவர்களுக்கு கடுமையான தண்டனை அவர்களுக்கு. வழங்கிக் கொடுக்க வேண்டும் என்ற
குணம் கொண்டவர். அவரது கோபத்தை
குறைக்க அவருக்கு ஒரு நிரந்தர வேலைக்கு ஏற்பாடு
செய்யும் அவரது நல விரும்பிகள்
ஆதரவற்ற
மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில்
காவலாளியாக வேலை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
தன்னைப் போன்று உடலளவில் குறைபாடு இருந்தாலும் மனதளவில்
மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு மத்தியில் சகோதரன் போல் தனது பணியை செய்து
வரும் அருண் விஜய், அங்கு நடக்கும் ஒரு
அநீதியைக் கண்டு கடும்கோபம் கொண்டு அதை செய்தவர்களுக்கு கடுமையான
தண்டனை கொடுக்க வைக்கிறார். அதன் மூலம் அவரது வாழ்க்கை என்னவானது? என்பதை
தன்னுடைய படங்களில் அவரது வழக்கமான
பாணியில் இயக்குநர் பாலா சொல்வது தான் ‘வணங்கான்’.என்ற
திரைப்பட கதைக்களம்.
அன்பும், கடும் கோபமும் நிறைந்த கொண்ட
ஒரு மனிதனை கதையின்
கதாநாயகனாக கற்பனையில்
அலங்காரம் செய்து அவர் மூலம் எளிய மக்களுக்கு அநீதி
இழைப்பவர்களுக்கு கடும்மையான தண்டனை கொடுப்பது தனது
படங்களின் முக்கிய அம்சமான பாணியை வைத்திருக்கும்
இயக்குநர் பாலா, இந்த படத்திலும் தனது அந்த பாணியை பின் பற்றி
தன் ரசிகர்களுக்காக திருப்திப்படுத்தும்
வகையில் வழங்கி யுள்ளார்.
இயக்குநர் பாலா கொடுக்கும் அடுத்த கஷ்ட்டத்தை அனுபவித்து
அடுத்தக் கட்டத்திற்கு எளிதில்
சென்றுவிடலாம் என்ற பெரும் நம்பிக்கையில் அருண் விஜய் மிக திறமையாக கடினமாக
உடல் மொழியின். பேசும் திறனை இல்லாத ஊமையாக வாழ்ந்து இருக்கிறார் இயக்குநர் பாலா வடிவமைத்த
கதாபாத்திரத்திற்கு எற்ப நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில்
அருண் விஜய் நடித்திருந்தாலும், அவரது உடல் மொழி,
முகபாவனை, செய்தலும் சண்டைக்காட்சிகள் மற்றும் அனைத்தும்
பாலாவின் படங்களில் நடித்திருந்த கதாநாயகர்களின் பாதிப்பு இருக்கும்
தவிர குறிப்பிட்டு சொல்லும்படி தனித்தும் எதுவும் இல்லை.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷின் அறிமுகம்
அமர்க்களமாக நடிப்பு இருந்தாலும், அடுத்தடுத்த
காட்சிகளில் கதாநாயகனை ஒருதலையாக
காதலிப்பது, அவரது முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவருக்காக
கண்ணீர் சிந்துவது, என அனைத்து நடிப்பில்
பார்வையாளர்களின் மனதில் நிரம்பி விடுகிறார்.
அருண் விஜயின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா,
அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக நடிக்கும் காட்சிகளில் படம் முழுவதும்
பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு கலங்க வைத்து விடுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இயக்குநர்கள் மிஷ்கின்,
மற்றும் சமுத்திரக்கனி,
ஆகியோர் நடிப்பு திரைப்பட இருப்பு படத்திற்கு பெரும் பலம் தருகிறது.
டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில்,
பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன்,
பிருந்தா சாரதி, தீபிகா என மற்ற வேடங்களில்
நடித்திருக்கும் அனைவரின் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு
மூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களாக வலம் வந்து வாழந்திருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை
விவரிக்கும் வகையில் உள்ளது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன்
பின்னணி இசை டைடில் கார்டு போடும் போதே
கவனம் ஈர்ப்பதோடு, திரைக்கதைக்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் எளிய மக்களின் வாழ்வியலையும்,
அவர்களது உணர்வுகளையும்
எதார்த்தமாக கேமராவில் காட்சிப்படுத்தியுள்ளார்.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா மற்றும்
சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஷில்வா இருவரும் இயக்குநர்
சொன்னதை
செய்திருக்கிறார்கள் என்பது படம் முழுவதும் தெரிகிறது.
எளிய மக்களின், அவரது வாழ்க்கையையும் மற்றும் வலிகளை திரையில் கொண்டு
வருவதோடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை
எதிர்த்து நிற்கும் கதாநாயகனையும்
எளிய மக்களின் ஒருவனாக கற்பனை செய்து சித்தரித்து அவர்களை
முன்னிலைப்படுத்து
வகையில் தொடர்ந்து செய்து வரும் இயக்குநர் பாலா, தனது
கதாபாத்திரங்களின் கடும் கோபத்தை இரத்தம் தெறிக்கும் வகையில்
காட்சிப்படுத்திலும், அதை எதார்த்தமான காட்சிகளின் மூலம், சில
இடங்களில் கலகலப்பாகவும்
கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
இயக்குநர் பாலாவின் முந்தைய படங்களின்
சாயல் சற்று இருந்தாலும், வியாபாரம் மற்றும்
வண்ணமயமான சினிமா உலகில், காண்பிக்க மறுக்கும் முகங்களையும்,
அம்மக்களின் சொல்லப்படாத வாழ்க்கையை கதைக்களமாக
கொண்டு மனிதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை
தொடர்ந்து செய்து வரும் இயக்குநர் பாலா,
மீண்டும் ஒரு முறை அன்பை ஆக்ரோஷமான வாய்
சொல்லிய மக்கள் மனதையும் உடலி வரன் மொழி திறனாளியாக உருவாக்கி இருக்கிறார். இயக்குனர் பாலா.