
வாலு பசங்க”
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் விரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “ வாலு பசங்க ” .
கிருஷ்ணா வென்ட்ரிலோக்விசம் (ventriloquism) முறையில் கலர்மச்சான் கதாபாத்திரத்தோடு தொகுத்து வழங்கும், இந்த நிகழ்ச்சியில் சுட்டிக்குழந்தைகளின் குறும்புத்தனமான மழலை பேச்சும், அவர்களது தனித்திறமைகளும் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

நிகழ்ச்சியின் முதல் பகுதியாக சுட்டிக்குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் அறிமுகமாகி அசத்துக்கிறார்கள்
நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியாக தொகுப்பாளர்கள் கிருஷ்ணா, கலர்மச்சானின் கலகலப்பான கேள்விகளுக்கு, சுட்டிக்குழந்தைகள் மழலை பேச்சில் பதிலளிப்பது அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைக்கிறது.
நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியாக, சுட்டிக்குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும், கலந்துகொண்டு சிறு வயது நினைவுகளை நினைவூட்டும் வகையில் கலகலப்பான கேம் ஷோ பகுதியும் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
நிகழ்ச்சியின் இறுதி பகுதியாக நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி ஜாலியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நிகழ்ச்சி நிறைவடைகிறது.
இந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 5.00 மணிக்கு ஜெயா டிவியில், ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான ” வாலு பசங்க ” நிகழ்ச்சியில் உங்கள் குழந்தைகளும் கலந்துகொள்ள ஓர் அறிய வாய்ப்பு…. 4 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கு பெற அவர்களை பற்றிய முழுவிவரங்களை 89255 13374 என்ற எண்ணிற்கு வாட்சப் செய்யவும்.