வாலன்டைஸ் டேபடப்பாடல்களைகே. ராஜன் வெளியிட்டார் !

Share the post

9 am to 9 Pm
வாலன்டைஸ் டே
படப்பாடல்களை
கே. ராஜன் வெளியிட்டார்


எம்.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் காலை 9 முதல் இரவு 9 வரை காதலர் தினம் படத்தை இதன் கலை , உடை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் என எட்டு பொறுப்புகளை கெளரி சங்கர் ஏற்று திறம்பட செய்துள்ளார்.

இதன் பாடல்களை பார்த்து ஆடியோ சி.டியை வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் வெளியிட்டு பேசியதாவது, ” சிறுமுதலீட்டு படங்கள் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால்தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். இந்தப் படத்தின் முதல் காட்சிக்கு வருபவர்களுக்கு டிக்கட் சிலவசமாக வழங்கப்படும் என கெளரி சங்கர் அறிவித்துள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

இயக்குனர் கெளரி சங்கர் பேசும் பொழுது, ” இதன் கதையை மூன்றுவிதமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன். புரிந்த காதல் , புரியாத காதல், புதிரான காதல் என்பதுதான் அது. படத்தை தியேட்டரில் முதல் காட்சியில் மட்டும் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்துள்ளேன். இசையமைப்பாளர் ஆதிஷ் உத்தியன் அவர்களுக்கு இன்னிசை வேந்தன் என்ற பட்டத்தை இவ்விழாவில் வழங்குகிறேன். ” என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் எஸ். சௌந்தரபாண்டியன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி, இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன், ஒளிப்பதிவாளர் மகிபாலன், வியாபார தொடர்பாளர் சண்முகம், கதாநாயகிகள் அபிநயா, ஸ்ரீபவி , ஐஸ்வர்யா, ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

என். விஜயமுரளி
PRO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *