கலைஞர் தொலைக்காட்சியில் வைரமுத்துவின்
“நாட்படு தேறல்” பாகம் 2 ஆரம்பம்!!
தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து சுமார் 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்.இவர் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக “நாட்படு தேறல்” என்கிற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார்.
இந்த 100 பாடல்களுக்காக 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குனர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
நாட்படு தேறலின் முதல் பாகம் கடந்த ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில், தற்போது இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி முதல் ஞாயிறுதோறும் பகல் 1.30 மணிக்கு இசையருவியிலும், மாலை 5.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.
வைரமுத்துவின் இந்த பிரம்மாண்ட முயற்சியில், இசையப்பாளர்கள் வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார், சைமன் கே.கென், அணில் ஸ்ரீனிவாசன், ரமேஷ் விநாயகம், இனியவன், அப்ஃகர், வாகு மசான், ஜெரால்டு பெலிக்ஸ், நோஃபெல் ராஜா, ரமேஷ் தமிழ்மணி உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.
நாட்படு தேறலின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள், வருகிற ஏப்ரல் 17-ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிறும் கலைஞர் தொலைக்காட்சியிலும், இசையருவிலும் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.