
“உசுரே”
திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :-
டீஜய், ஜனனி, மந்த்ரா, கிரேன்
மனோகர், பாவல் நவகீதன், செந்தி குமாரி, ஆதித்ய கதிர், தங்கதுரை,
மெல்வின் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – நவீன் டி.கோபால்.
இசை: –
கிரண் ஜோஷ்
ஒளிப்பதிவு :-
மார்க்கி சாய்.
படத்தொகுப்பு:-
மணிமாறன்
தயாரிப்பாளர்கள் :- ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் – மௌலி எம்.ராதாகிருஷ்ணா
தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி இருக்கும் நாயகி ஜனனியை
டீஜே காதலிக்கிறார். முதலில் அவரது காதலை ஏற்க
மறுத்த ஜனனி பிறகு அவரது காதலின் தீவிரத்தைப் பார்த்து விட்டு கண்களால்
அவரும் டீஜேவை காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஜனனியின் அம்மா
மந்த்ரா தடை போடுகிறார்.
டீஜேவிடம் இருந்து தனது மகள் ஜனனியை பிரிப்பது
எப்படி என்று திட்டம் போடுகிறார். மந்த்ராவின்
திட்டத்தை மீறியதாக ஜனனியும், டீஜேவும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதை
எதிர்பார்க்காத விதமாக அதிர்ச்சி தரும் வகையில் காரணமான கடைசியில் மூலம் சொல்வது தான் “உசுரே” கதைக்களம்.
அசுரன்’ படத்தின் மூலம் அதிரடி இளைஞராக கவனம்
ஈர்த்தவர் தான் டீஜே, இதுல இளம் கதாநாயகனாக
காதல் காட்சிகள் மூலம் கவனம் நமது மனதை ஈர்க்கிறார்.
அதிகம் பேச வில்லை என்றாலும், கண்களால் உருகி உருகி காதலிக்கும் காட்சிகளில்
பார்வையாளர்கள் மனதில் இடத்தில் உள்ளமும் உருகிவிடும்
அளவுக்கு நடிப்பில் ஸ்கோர் செய்து நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனி சில இடங்களில், இளமையாகவும், அழகாகவும், காதல்
கதைக்கு பொருத்தமான நடிகையாக இருக்கிறார்.
அதிகம் நடிக்க கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
என்றால், அவர் திரையில் தோன்றி சிரித்தாலும், அழுதாலும் அந்த
காட்சிகளை ரசிக்க முடிகிறது. அந்த அளவுக்கு அவரது
திரை இருப்பினும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் சிறகடித்த மந்த்ரா இவர் தானா, என்று அதிர்ச்சியையும்
அளவுக்கு அம்மணி முகம் மாறியுள்ளது.
உருவத்திலும், நடிப்பிலும் கூட அம்மா கதாபாத்திரத்திற்கு
பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
காமெடி நடிகராக இருந்த கிரேன் மனோகர், அழுத்தமான அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தனது வழக்கமான உடல் மொழியை தவிர்த்துவிட்டு அளவாக நடித்து தனக்கு
கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாராட்டுக்கள் பெற்றுள்ளார்.
நாயகனின் அம்மாவாக நடித்துள்ளார் செந்தி குமாரி, நாயகனின்
நண்பர்களாக நடித்திருக்கும் தங்கதுரை, ஆதித்யா
கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என அனைத்து
நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார் கள்.
இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் காதல் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, காதல் ஜோடியை பார்வையாளர்கள்
மனதில் பதிய வைத்து விடுகிறார். பின்னணி இசை எளிமையான கதை மற்றும்
காட்சிகளுக்கு பெரும் வலிமை சேர்க்கும் வகையில் பயணித்த திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய், கிராமத்தின் அழகை
எளிமையாகவும், இயல்பாகவும் காட்சிப்படுத்தி யுள்ளார்.
கதாநாயகன் மற்றும் கதாநாயகியையும், அவர்களது காதல்
உணர்வுகளையும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியுள்ளார்.
காதல் ஜோடியை சுற்றி பயணிக்கும் கதையாக
இருப்பதால், அதை வழக்கமாக சொல்லாமல்,
பார்வையாளர்களின எதிர்பார்ப்பு தரும் வகையில் சொல்லி, தனது படத்தொகுப்பு
மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச்
சென்றுள்ளார். படத்தொகுப்பாளர் மணிமாறன்.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் நவீன் டி.கோபால்,
காதல் கதையாக இருப்பதால், அதை குடும்ப பின்னணியில் திரைக்கதையுடன்.
நாகரீகமாக சுவாரஸ்யமாகவும் சிறப்பாக சொல்லியுள்ளார்.
காதலில் புதிய யூகமா வைக்கும் இயக்குநர், காட்சியில் பார்வையாளர்களின்
யூகங்களை கடந்து, எதிர்பார்க்காத ஒன்றை சொல்லி
அதிர்ச்சியளிப்பது போன்ற காட்சியை கொடுத்து நமது இதயத்தை கனக்கச் செய்து விடுகிறார்.
இயக்குனர்.
படம் பார்த்தத்தில், “உசுரே” பாவம் இந்த காதல் ஜோடிகளை
பிரித்ததில் யாருக்கும் லாபமும் இல்லை. இந்த
மண்ணுக்கு தான் லாபம் . காதல் ஜோடிகளின் “உசுரு”. எங்கேயோ காற்றோடு கலந்து இருக்கும்.