
அம்… ஆ” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் : – திலீஷ்போத்தன், தேவதர்ஷினி, ஜாபர்
இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி,
சுருதி ஜெயன், அலென்ஸியர்,மாலா
பார்வதி,
ஜெயராஜன், கோழி கோடு மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : தாமஸ் செபாஸ்டியன்.
மியூசிக் :- கோபிசுந்தர்.
ஒளிப்பதிவு:- அனிஷ்லால்.ஆர்.எஸ்.என்.
படத்தொகுப்பு:-பிஜித்பாலா.
தயாரிப்பாளர்கள் :- காப்பி புரொடக்சன்ஸ்…
கேரளாலுள்ள மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழை பெண்.
தேவதர்ஷினி, தாய் – தந்தை இல்லாத தனது பேத்தியை
வளர்க்கிறார். அவள் மீது அளவுக்கு கடந்த அதிகமான அன்பு பாசம் வைத்திருக்கும் அவர்,
அவரை யாரிடமும் பேச விடாமல், பொத்தி பாதுகாப்புடன் வளர்க்கிறார்.
இதற்கிடையே, அந்த கிராமத்திற்கு வரும் திலீஷ் போத்தன், தேவதர்ஷினி மற்றும்
அவரது பேத்தி குறித்து பலரிடம் விசாரித்துவருகிறார்.
இரவு நேரத்தில் அந்த கிராமத்தில் எதையோதேடுகிறார்.
திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது சந்தேகமடையும் கண்
தெரியாத முதியவர், அவர் யார்? என்பதை அறியமுயற்சிக்கிறார்
மறுபக்கம் தேவதர்ஷினி மலை கிராமத்தில் இருந்து
வெளியேறும் மருத்துவர் ஒருவரை தேடுகிறார்.
தேவதர்ஷினி மற்றும் அவரிடம் இருக்கும் குழந்தை குறித்து
விசாரிக்கும் பொது திலீஷ் போத்தன் யார்?, அவர் எதற்காக
தேவதர்ஷினி மற்றும் அவரிடம் இருக்கும் குழந்தை குறித்து விசாரிக்கிறார்,
என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் பின்னணியில்
உணர்வுப்பூர்வமான திரைக்கதை மூலம்
கொண்டு போவதே “அம்…ஆ” கதைக்களம்…
நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை தேவதர்ஷினி,
இதுல முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக
நடித்துள்ளார். இதுல அதிகமாக பேச
வில்லை
முகபாவங்கள் மூலமாக நடிப்பில் சோகமான உண்மை வாழ்வியல்
வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை போலஉணர்வு பூர்வமாக வாழ்ந்து இருக்கிறார்.
என்ன என்றாலும், பயம், குழந்தை மீதான பாசம், பணிவு என்று அனைத்து
உணர்வுகளையும் தனது மவுனம்
மூலமாக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
எதார்த்தமான நடிப்பு மற்றும் தனது திரை இருப்பு மூலம் முதல்
பாதி படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார்
திலீஷ் போத்தன். சாலை பணியின் மேற்பார்வையாள
ராக கிராமத்தில் நுழையும் திலீஷ் போத்தன், தனது ஒவ்வொரு
அசைவுகளிலும், பல மர்மங்கள் மறைந்திருப்பதை வெளிப்படுத்தும் விதமும், அதன்
பின்னணி என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை
பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி படத்துடன் ஒன்றிவிடச் செய்து விடுகிறார்.
ஊர் தலைவராக நடித்திருக்கும் ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவன், டிஜி ரவி, ஸ்ருதி ஜெயன்,
அலென்ஸியர், மாலா பார்வதி என மற்ற வேடங்களில்
நடித்திருப்பவர்கள் அனைவரும் நடிகர்களாக
அல்லாமல்
அந்தெந்த கதாபாத்திரங்களாகவே நம் மனதில் பதிந்து விடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அனிஷ்லால்.
ஆர்.எஸ்-ன் கேமரா மலை கிராமத்தின்
ஆபத்தையும், அம்மக்களின் வாழ்க்கையையும் மிக இயல்பாக
காட்சிப்படுத்தியிருக்கிறார், பார்வையாளர்களும் அந்த கிராமத்தில்
பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில், மலை
கிராம மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடலும்,
பின்னணி இசையும் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்கள்
மீதான கவனத்தை திசை திருப்பாமல் பயணித்திருக்கிறது.
ஒரு மலை கிராமம், அங்கிருக்கும் மாறுபட்ட மனிதர்கள், அங்கு புதிதாக வரும்
ஒரு நபர் இந்த மூன்றையும் வைத்துக்கொண்டு,
பார்வையாளர்களின் முழு கவனத்தையும் திரையின் பக்கம் ஈர்க்கும் வித்தையை
மிக சிறப்பாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிஜித் பாலா.
கவிபிரசாத் கோபிநாத்தின் எழுத்தும், தாமஸ் செபஸ்டியனின்
இயக்கமும் ஒரு சாதாரண கருவை
மிக சுவாரஸ்யமான படமாக மாற்றியிருக்கிறது.
முதல் பாதி முழுவதும் சஸ்பென்ஸ் திரில்லராக பயணித்து வைத்து
பார்வையாளர்களை உட்கார வைக்கும் திறனை இயக்குநர்
தாமஸ் செபாஸ்டியன், செய்து விடுகிறார்.
இரண்டாம் பாதியில் குழந்தைக்கும், தாய்மைக்கும்
இடையிலான பாசப்போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லி
பார்வையாளர்களின் இதயத்தை தொடச் செய்து விடுகிறார்.
“அம்..ஆ” படத்தை பார்ப்பவர்களை தாய் பாசத்தின் உண்மையான
உணர்வுகளை ஆஹா…அருமை,
என்று சொல்ல வைக்கும். திரைப்படம்