உலகம்மை’ திரை விமர்சனம்!!

Share the post

உலகம்மை’ திரை விமர்சனம்!!

மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி டாக்டர். வீ.ஜெயப்பிரகாஷ் தயாரிப்பில்,
விஜய் பிரகாஷ் இயக்கி. கௌரி கிஷன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் உலகம்மை.

மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், வெற்றி மித்ரன், பிரணவ், விஜய் பிரக்ஷ், அருள்மணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இளையராஜா இசையமைத்
திருக்கிறார்.

கே.வி.மணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை கொண்டு வெளியாகியிருக்கும் சமூக வாழ்வியல் திரைப்படம் தான் ‘உலகம்மை’.

1970 நெல்லை மாவட்ட பின்னணியில், -களில் கதை நடக்கிறது.

திருமண வயதை தாண்டிய தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார் மாரிமுத்து,

அப்போது, தனது விவசாய நிலத்தில் பணியாற்றும் உலகம்மையை தனது பெண்ணுடன் துணைக்கு போக சொல்லிவிட்டு, அங்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, பெண்ணின் திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்.

பெண் பார்க்க வந்த வாலிபரும் உலகம்மை தான் மணப்பெண் என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதித்து விடுகிறார்.

உலகம்மைக்கு உண்மைதெரிய வர,

அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார்.

பெண் பார்க்க வந்தவரை நேரில் சந்தித்து .

இதனால், திருமணம் நின்று விடுகிறது.

திருமணம் நின்றதற்கு உலகம்மை தான் காரணம், என்று நினைக்கும் மாரிமுத்து, உலகம்மையை பழிவாங்கும் நோக்கத்தில் அவருக்கு எதிராக ஊர் மக்களை திருப்பி விடுவவதோடு, அவருக்கு மறைமுகமாக பல தொல்லைகள் கொடுக்கிறார்.

எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை தைரியமுடன் எதிர்த்து நிற்கும் உலகம்மை, ஆதிக்க குணம் படைத்தவர்களின் தொடர் அடக்குமுறைகளையும்,
அக்காலத்து சாதி கட்டமைப்புகளையும் எப்படி எதிர்கொண்டு தனது வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்,

என்ற கோணத்தில் கதை செல்கிறது.

கௌரி கிஷன் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், வெற்றி மித்ரன், பிரணவ், விஜய் பிரக்ஷ், அருள்மணி அனைவரும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள்.

இளையராஜா இசையும்
கே.வி.மணி ஒளிப்பதிவும் படத்துக்கு பக்க பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில்

*உலகம்மை அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றிருக்கிறது.
*

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *