
“டிரெண்டிங்” திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் :- கலையரசன்,பிரியாலயா, பிரேம்குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா ஷிவனயா
மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- சிவராஜ்.
மியூசிக் :- சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு :-பிரவீன் பாலு.
படத்தொகுப்பு :-
நாகூரான் ராமச்சந்திரன்
தயாரிப்பாளர்கள் :- ராம் பிலிம் ஃபேக்டரி ஆனந்த்.ஜி ப்ரென்ட்ஸ் – மீனாட்சி ஆனந்த்.
கலையரசன் – பிரியாலயா தம்பதி இருவரும் தங்கள் பெயரில்
ஒரு யூடியுப் சேனலை ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
இது சுமார் மூன்று லட்சத்திற்கும் மேலான விவோஸ் இதை
பார்க்கின்றனர்கள்.
இதனை தொடர்ந்து. தங்கள் யூடியுப் சேனல் மூலம் கிடைக்கும்.
வருவாயைக் கொண்டு பெரிய பங்களா வீடு, கார்
என வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் (தடை) ஆகிவிடுகிறது. இதனால் வருமானம்
இல்லாமல் பச்சத்தில் இருவரும் தவிக்கிறார்கள்.
கடனைத் திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
பிரச்சனையில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.
அந்த சமயத்தில் ஒரு தொலைபேசி
மூலமாக அவர்களை தொடர்பு கொள்கின்றனர்.
அதுல ஒரு மர்ம நபர், தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்திருக்கிறோம்.
அதுல நீங்கள் பங்குக் கொள்ள விரும்பம் இருக்க அதுல நீங்கள்
வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார்.
அதே சமயம், இந்த ரியாலிட்டி ஷோ பற்றி யாரிடமும் சொல்ல
கூடாது.இதுல பல விதிமுறைகள் விதிப்பவர், தம்பதி
இடையே விளையாடும் இந்த போட்டி அவர்களது
இல்லத்தில், ஏழு நாட்கள் விளையாட வேண்டும். என்றும், நாங்கள் கொடுக்கும்
டாஸ்க்குகளில் நீங்கள் வெற்றி பெற்றால் பரிசுத் தொகை உயரும் என்றும், இல்லை
தோல்வியடைந்தால் வெற்றி பெற்ற பரிசுத்
தொகையை நீங்கள் இழக்க வரலாம் என்று கூறுகிறார்.
தங்களது பண தேவைக்காக கடன் பிரச்சனையில் இருந்து
மீண்டுவருவதற்கு மர்ம மனிதரின் போட்டியில்
பங்கேற்கும் தம்பதிகள், ஆரம்பத்தில் குறைந்த போட்டிகளில்
வென்று சில லட்சங்களை வென்றாலும், அடுத்தடுத்து
போட்டியின் மூலம் தாங்கள் எதிர்பார்க்காத சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
அவை என்ன? அதனால் அவர்கள் வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள்
உருவெடுக்கிறது? என்பதை சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களின்
மனசாட்சியை உலுக்கும் வகையில் சொல்வது தான்
“டிரெண்டிங்”
கதாநாயகனாக நடித்துள்ள கலையரசன் மற்றும்
கதாநாயகியாக நடித்துள்ள பிரியாலயா இருவரும்
முழுப்படத்தையும் தங்கள் நடிப்பால் தூக்கி நிறுத்துள்ளார்கள்.
இவர்கள் இருவருக்கும் உள்ள நடக்கும் உரையாடல்கள்
மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்டு
வடிவமைத்துள்ள திரைக்கதை மற்றும் காட்சிகளை தங்கள்
இயல்பான நடிப்பு
மூலம் சுவாரஸ்யமாக நகர்த்திச்
சென்றுள்ளார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலையரசன் தனது நடிப்பின்
திறமையில் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு பாராட்டு
பெற்றுயுள்ளார். பல இடங்களில் வசனம் பேசாமல் தனது கண்களின்
மூலமாகவே நடித்துள்ளார் கலையரசன்.தனது கதாபாத்திர
குணாதிசயங்கள் மாற்றம் அடையும் இடங்களில் சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.
நடனம் மூலம்
அறியப்பட்ட நடிகை பிரியாலயா, இந்த படத்தில் சிறந்த நடிகையாக முத்திரை
பதித்துள்ளார். நாயகனுக்கு இணையான வேடத்தில், போட்டி
போட்டு நடித்துள்ளார் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம்
ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சிறிய வேடம் என்றாலும் பிரேம்
குமாரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைக்கதைக்கு பலம்
சேர்த்துள்ளது. பெசண்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா ஆகியோர் வருகை திரைக்கதையின்
திருப்பத்திற்கு உதவியிருக்கின்றன.
ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றால் அதுல
வெவ்வேறு விதமான கோணங்கள் மூலம் காட்சிகளில் வித்தியாசத்தை
காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதாபாத்திரங்களின்
உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும்,
பின்னணி இசையும் படத்திற்கு மேலும் கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.
பின்னணி இசையில் அளவான முறையில் கையாண்டிருக்கிறார் சாம்.சி.எஸ், மர்ம
நபரின் குரல் மற்றும் அவரது என்ட்ரி பீஜியம்களை கவனம் ஈர்க்கும் வகையில் கொடுத்துள்ளார்.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், சில இடங்களில் விறுவிறுப்பான, பல இடங்களில் பார்வையாளர்கள் யூகிக்கவும் செய்யும் அளவுக்கு காட்சிகளை தொகுத்துள்ளார்.
யூடியுப் உள்ள சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பலர் அதற்காக பல்வேறு யுத்தியைக்கொண்டு
செயல் படுத்துக்கிறார்கள். குறிப்பாக தங்கள் தினமும் வாழ்வியல் சம்பவங்களை
பகிர்ந்துக் கொள்கிறார்கள், சில அந்தரங்க விஷயங்களை
நல்லவே பகிர்ந்துக் கொள்ளும் அவலங்களும் நடக்கிறது. அத்தகைய
மனிதர்களுக்கு அறிவுரைகள் மட்டும் கொண்டு எச்சரிக்கை இருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சிவராஜ்.
தம்பதியின் யூடியுப் சேனல் திடீரென்று டெலிட் ஆகிறது.
அந்த நேரத்தில் ரியாலிட்டி ஷோ பற்றிய அழைப்பு,
அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என படம் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும்,
அதனால் தம்பதி சந்திக்க இருக்கும் சிக்கல்கள் அனைத்தும்
பார்வையாளர்கள் யூகிப்பது போலவே இருக்கின்றன. இருப்பினும்,
பிரேம் குமாரின் வருகைக்குப் பிறகு தொடங்கிய இரண்டாவது சீசன்
போட்டியும், அதுல தம்பதிக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளும்
அதிர்ச்சியளிக்கிற
வகையில் இருக்கின்றன.
ஒரே இடத்தில் நடக்கும் கதை,
போட்டியின் மூலம் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்படும்
பிரச்சனைகள் யூகிப்பது போல் இருப்பது ஆகியவை திரைக்கதையில்
என்ன செய்தாலும், கலையரசன் மற்றும் பிரியாலயா நடிப்பில் படத்தை அதிகமாக ரசிக்க வைத்து விடுகின்றன.
“டிரெண்டிங்” படம் பார்த்தத்தில் பணம் இருந்தால் எல்லாத்தையும் வாங்கிவிடலாம். குறியீடு சொல்லும் தாரகை மாத்திரம்.