
’ட்ராமா’ (TRAUMA) திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்ஜீவ், ஆனந்த் நாக், பூர்ணிமாரவி, பிரதோஷ், மாரிமுத்து, ரமா, பிரதீப்.கே.விஜயன், ஈஸ்வர், நிழல்கள்ரவி, வையப்புரி, மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – தம்பிதுரை மாரியப்பன்.
மியூசிக் :- ஆர்.எஸ்.ராஜ் பிரதாப்.
ஒளிப்பதிவு :-அஜித் சீனிவாசன்.
தயாரிப்பாளர்கள் : – ட்ரும் புரொடக்சன்ஸ் ஹவுஸ் – எஸ். உமா மகேஸ்வரி.
விவேக் பிரசன்னா, சாந்தினி, இந்த இரு தம்பதியினருக்கு திருமணமாகி பல
வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமடைவதை சாந்தினிக்கு, ஒரு
மர்மமான போன் கால் மூலம் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு
அப்பா தனது கணவர் விவேக் பிரசன்னா இல்லை, என்ற உண்மை
தெரிய வருகிறது, அதே போன் கால் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வீடியோ வருகிறது.
இரண்டாவது கதை.
ஆட்டோ ஓட்டுநரின் மகளான பூர்ணிமா ரவி, காதலனால் அவன் நல்லவன் என்று பழகி கர்ப்பமடைகிறார்
ஏமாற்றப்படுவதோடு, இல்லாமல் காதலனின் உண்மையான
பின்னணி என்ன?அவனது பற்றி தெரிந்து
கொண்டு அவருடன் வாழவே கூடாது, என்ற ஒரு முடிவுக்கு வருகிறார். பூர்ணிமா.
இந்த இரண்டு கதைகளில் சின்னச் சின்ன பாதிப்புகள் உள்ளது.
இந்த பெண்கள் அதில் இருந்து தப்பித்தாரா ? இவர்களின் பாதிப்புகள்
என்ன? பின்னணி என்ன! என்பதை இருப்பவர். அவர்கள் யார்? என்பதை கதையின் மூன்று விதமான கதைகளாக
பிரித்து தொகுப்பில் சொல்லியிருக்கிறார், அவைகளின் மர்ம
முடிச்சுகள் இணைப்பது தான் என்ன இதுதான் ‘ட்ராமா’.படத்தின் கதைக்களம்…
திரைப்பட கதையின் கதாநாயகனாக நடித்திருக்கும் விவேக்
பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பு மூலம் பல
உணர்வுகளை கொட்டி நடித்திருக்கிறார்.
மனைவியின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்பது
தெரிந்தாலும், அதை மனைவியிடம் இருந்து மறைப்பது, அதனால்
மனைவிக்கு ஏற்படும் பெரும் பாதிப்புகள் ஆகியவற்றை எண்ணியபடி
வருந்துவது என்பதை நடிப்பில் சிறப்பாக அசத்தியுள்ளார்.
சாந்தினி.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, குழந்தை மீது
ஆர்வம், இருக்க குழந்தை இல்லாத கவலை, ஒரு பக்கம் இருக்க கர்ப்பமடைந்த
மகிழ்ச்சியில் வெளிப்படுத்தும் விதம், பிறகு அதே கர்ப்பத்தால்
உருவெடுக்கும் பிரச்சனை என பல இடங்களில்
அழுத்தமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு எற்ப பலம் சேர்த்திருக்கிறார்.
இளம் நாயகனாக நடித்திருக்கும் பிரதோஷ், அவரது
காதலியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி இருவரும்
பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரத்திற்கு எற்ப
நியாயம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்கள்.
விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த்
நாக் கவனத்தை ஈர்த்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டராக
நடித்துள்ளார் சஞ்ஜீவ் அவரது நடிப்பிலும் ஒரு குறையில்லை. மாரிமுத்து, பிரதீப்
கே.விஜயன், ரமா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்
திற்கு சிறப்பாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்களும்,
பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் கேமரா
படத்தின் தரத்தை உயர்த்தி பலத்தை காட்டியுள்ளது.
ஒரே கதையை மூன்று விதமான கதைகளாக பிரித்து சொல்லியவிதத்தில்,
அவற்றின் மர்ம முடிச்சுகள் மூலமாக
இணைத்துள்ள படத்தொகுப்பாளர்
முகன் வேல் கதையின் பணியால் கவனத்தை ஈர்க்கப்படுகிறார்
எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன், மருத்துவ பின்னணியில் நடக்கும்
உண்மையான
குற்ற செயல்களை மையத்தை வைத்து தெளிவாக எழுதியிருக்கும்
திரைக்கதையில் சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதை
சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இருக்கின்றன
மூன்று கதைகள் மூலம் தான் கதையை சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் காட்சிக்கு காட்சி நிறைய
அதிர்ச்சியளித்து பார்வையாளர்களை மிரளவைத்து. படத்துடன் ஒன்றிவிட வைத்துள்ளார் .
மொத்தமா பார்த்தால் , ‘ட்ராமா’ இத்திரைப்படத்தில் அனைத்தும் அன்றாடம்
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும்.
ஒவ்வொரு குடும்ப பின்னணியில் நடக்கும்
சம்பவங்கள்.தாராள
மாக அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டியப் படம்.