“பாரம்பரிய வைத்தியம்”
ஜெயா தொலைக்காட்சியில் நம் பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்தும் விதமாக அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நோய்களுக்கான தீர்வுகளை நடைமுறையில் விளக்கி காண்பிக்கும் விதமாக “பாரம்பரிய வைத்தியம்” எனும் பகுதி ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் “காலை மலர்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காலை 8.45 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இப்பகுதியை பிரபல சித்த மருத்துவர் ராஜமாணிக்கம் தொகுத்து வழங்குகிறார். அன்றைய தினம் அவர் தயாரிக்கப் போகும் மருந்தைப் பற்றியும், அந்த மருந்தின் நன்மையையும் விரிவாக எடுத்துரைப்பார். நம்மைச் சுற்றி ஏராளமாகக் கிடைக்கும் இயற்கைப் பொருட்களின் மருத்துவ பண்புகளையும் விளக்குகிறார்.
வரும் வாரங்களில் பெண்கள் கரு முட்டை உற்பத்திக்கான மருத்துவம் ,வயோதிகர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, காய்ச்சல்,தொண்டைவலி ,குழந்தை காமாலை தடுப்பு ,உடல் வலி,நெஞ்சு சளி மற்றும் முக வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு எளிய மருத்துவ தீர்வுகளை ஒளிபரப்பாக இருக்கிறது.