ஜெ.துரை
பொம்மை திரை விமர்சனம்
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து வெளிவந்துள்ள படம் பொம்மை இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடித்துள்ளார்
பொம்மையுடன் காதல் என்ற வித்தியாசமான கற்பனைக்கு எட்டாத கதை என்று
முதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியது
மேலும் அபியும் நானும் மொழி என எப்போதும் மனதை தொடும் படங்களை எடுத்த ராதா மோகன் இப்படியொரு கதையை எப்படி தேர்ந்தெடுத்தார் என்று ரசிகர்களிடேய பெரும் அதிருப்தி
ரசிகர்கள் வைத்திருந்த பல எதிர்பார்ப்பை பொம்மை திருப்திபடுத்தவில்லை
சிறு வயதில் நந்தினி எனும் பெண்ணை கதாநாயகன் எஸ்.ஜே. சூர்யா காதலிக்கிறார் இருவரும் பள்ளி பருவத்தில் நன்றாக பழகுகிறார்கள் தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டிருந்த எஸ்.ஜே. சூர்யாவிற்கு துணையாக நந்தினியியுடன் உறவு ஏற்படுகிறது
ஆனால் இந்த உறவும் எஸ்.ஜே. சூர்யாவிற்கு நீடிக்கவில்லை ஒரு நாள் ஊர் திருவிழாவில் நந்தினியை சிலர் கடத்தி விடுகிறார்கள் இதனால் மன நிம்மதி இல்லாமல் போகும் எஸ்.ஜே. சூர்யா சில மன ரீதியான நோயால் பாதிக்கப்படுகிறார்
இதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஜவுளி கடையில் அழகுக்காக நிற்க வைக்கப்படும் பொம்மைகளுக்கு கண், புருவம் போன்ற அம்சங்களை வரையும் வேலை செய்து வந்த சமயத்தில் நந்தினி போலவே இருக்கும் பொம்மையை காதலிக்க துவங்குகிறார்
அப்போது திடீரென தனது கடந்தகால வாழ்க்கையில் வந்த தனது காதலி நந்தினி என்ற பெண்ணின் முகமும் இந்த பொம்மையும் ஒரே மாதிரி இருப்பது போல் அவருக்கு தெரிகிறது
இதனால் அந்த பொம்மையை தனது நந்தினி என நினைந்து கொண்டு பொம்மையிடம் கற்பனை உலகில் வாழுகிறார்
இப்படியொரு மனநிலையில் இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவால் என்னென்ன விபரீதங்கள் நடந்தது
இதிலிருந்து அவர் வெளியே வந்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை
சில இடங்களில் ஓவர் ஆக்டிங் இருந்தாலும் அதை கச்சிதமாக கையாண்டுள்ளார்
அதே போல் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரின் நடிப்பு பாராட்டுக்குரியது
எந்த ஒரு குறையும் இல்லாமல் அழகாக நடித்து அசத்திவிட்டார்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாந்தினி தான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்
இயக்குனர் ராதாமோகன் என்று எதிர்பார்த்து திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது
வழக்கமான கதைக்களம் இல்லை என்றாலும் சுவாரஸ்யம் இல்லாத காரணத்தினால் திரையரங்கை விட்டு வெளியே செல்ல படம் எப்போ முடியும் என்று மனம் தவிக்கிறது
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் பின்னணி இசை ஓகே ஆனாலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை
ஒளிப்பதிவு எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம்
திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை
மொத்தத்தில் பொம்மை திரைப்படம் ரசிகர்களிடயே பெரும் நஷ்டத்திற்குறிய ஏமாற்றம்.