டூரிஸ்ட் ஃபேமிலி”திரைப்பட விமர்சனம்…

Share the post

“டூரிஸ்ட் ஃபேமிலி”
திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், பாய்ஸ், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்
ஸ்ரீஜாரவி,பகவதி,
சுதர்ஷன், ரமேஷ் திலக்,ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :- அபிஷன் ஜீவிந்த்

மியூசிக் :- ஷான் ரோல்டன்.

ஒளிப்பதிவு:- அரவிந்த் விஸ்வநாதன்.

படத்தொகுப்பு :-பரத்விக்ரமன்

தயாரிப்பாளர்கள்:- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம்.ஆர்.பி. என்டர் டென்மென்ட் .

ஈழத் தமிழரான சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக

இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு,

சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்கிறார்.

இதற்கிடையே, சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வந்த அதே நாளில் அங்கு குண்டுவெடிப்பு

சம்பவம் ஒன்று நடக்க, இதற்கும் சசிகுமாரின் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக

நம்புகின்றனர் காவல்துறை, அந்த குடும்பத்தை பிடித்து வழக்கை‌ போடுவதற்காக

முயற்சியில் ஈடுபடுகிறது. அதன் பிறகு என்ன ஆனது

என்பதை மேடை நாடகம் மாதிரி சொல்வதுதான் “டூரிஸ்ட் ஃபேமிலி”

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் வேற மாதிரியான

முகபாவங்கள் காட்டக்க கூடிய நடிகர் சசிகுமார்,

தனது புதுவிதமான நடப்பில் சிறப்பாக செய்திருக்கிறார்.

சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும்

சிம்ரனுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. ஒரு பக்கம் சசிகுமாரை

விட மூத்தவராக திரையில் தெரிகிறார், அவரது மனைவி கதாபாத்திரத்தில்

கொஞ்சம் கூட ஜோடி பொருத்தம்
இல்லாமல் நடித்திருக்கிறார்.

சசிகுமார் – சிம்ரன் தம்பதியின் மூத்த மகனாக

நடித்துள்ள மிதுன் ஜெய்சங்கர். மற்றும் இளைய மகனாக நடித்துள்ள கமலேஷ் ஜெகன் இருவரும்

கொடுத்த வேலையை கனகச்சிதமா நடித்துள்ளார்கள்.
அதுல சிறுவன்

கமலேஷ், ரசிகர்களை கவரும் வகையில்கவனத்தை ஈர்த்துள்ளார்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் யோகி பாபு அதன்

பிறகு காணாமல் போய் விடுகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி,

யோகலஷ்மி என மற்ற வேடங்களில் நடித்துள்ளார் அனைத்து

நடிகர்களும் செயற்கைத்தனமாக நடித்துள்ளனர்கள்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளார்.

அரவிந்த விஷ்வநாதன் ஒளிப்பதிவு.

மேடை நாடகம் மாதிரி அமைந்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், திரைக்கதையில் சிறப்பு‌ மிக்க

அம்சங்கள் எதுவும் பெரிதாக இல்லை. என்ன என்பதை உணர்ந்து

காட்சிகளை சுருக்கி, படத்தின் நீளத்தை குறைத்திருப்பது .

படத்திற்கு உறுதுணையாக பெரிதும் கைகொடுத்திருக்
கிறது.
எழுதி இயக்கியுள்ள அபிஷன் ஜீவிந்த்,

ஈழத் தமிழர்களின் அவல நிலையை கதைக்கருவாக உருவாக்க

வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்தாலும்,

அதை நகைச்சுவை
யாக சொல்லியிருக் கிறார். ஆனால், படத்தில் இடம்பெறும்

நகைச்சுவை காட்சிகள்

அனைத்தும்
செயற்கை தனமாக
இருப்பதால்

சிரிப்புக்கு தான் வருகிறது.

முதல் பாதி முழுவதிலும் சீரியல் மாதிரி பயணித்
துள்ளது.

இரண்டாம் பாதியில் சசிகுமாரின் மூத்த மகனின் காதல் தோல்வி, இளைய மகனின்

குறும்புத்தனம் ஆகியவற்றை வைத்து

பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கும்

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், இறுதியில் எதிர்பார்க்காத

சுவாரஸ்யமாக
படத்தை முடித்திருப்பது

ரசிக்க கூடியதாக இல்லை, அவர் சொல்வது ஏற்றுக்கொள்ளும்
வகையில் இல்லை.

மொத்தமா பார்த்தால்
இந்த “டூரிஸ்ட் ஃபேமிலி”படம்

பார்த்ததில் சீரியல் பார்ப்பதும் போன்ற உணர்வு தான் வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *