செவிலியர்களின் உன்னதப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை மனிதச் சங்கினி பேரணியை நடத்தி கவுரவித்தனர் சர்வதேச் செவிலியர் இனம் மே 12 அன்று கொண்டாடப்படுகிறது
சென்னை, 11 மே 2023 அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் செவிலியர் பிரிவு இன்று சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடும் வகையில் மனிதச் சங்கிலியை உருவாக்கி அக்கறை, அர்ப்பணிப்பு ஈடுபாடு, இரக்கம் மற்றும் கருணையுடன் தங்கள் பொறுப்புகளை முறையாகச் செய்ய எப்போதும் முன்னணியில் இருக்கும் செவிலியர்களுக்கு புகழாரம் செலுத்தியது மருத்துவமனையின் ஊழியர்கள் மனித சங்கிலி அமைப்பில் ஆர்வத்துடன் பங்கேற்று, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடரவும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணவும் மக்களை ஊககுவித்தனர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போஸ்டர் தயாரித்தல், வினாடி வினா, நடனம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இயக்குநர் திரு. ஆர் சந்திரசேகர் கூறுகையில், “எங்கள் செவிலியர்கள் எங்கள் உயிர்நாடி, இது கோவிட்-19 தொற்றுநோய் போன்ற சவாலான காலங்களில் நிரூபிக்கப்பட்டடுள்ளது. தங்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தொழில் ஈடுபாடு, வீரம் மற்றும் சிறந்த செயல்கள் மூலம், செவிலியர்கள் நம் தேசத்திலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொற்றுநோய் காலம் முழுவதும் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். மேலும் அவர்கள் தினசரியும் அதை செய்கின்றனர். தொற்றுநோய் காலத்தில் செவிலியர்களின் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டது, ஆனாலும் அவர்கள் சேவையை கைவிடவில்லை. சுகாதார அமைப்பு மற்றும் சமூகத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக செவிலியர் சமூகத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க இந்த சந்தரப்பத்தில் நாங்கள் விரும்புகிறோம், என்று கூறினார்.-