காதலிக்கநேரமில்லை திரைப்பட விமர்சனம்!!

Share the post

காதலிக்க
நேரமில்லை திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்: -ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோகன் சிங்

இயக்குனர்: கிருத்திகா உதயநிதி
தயாரிப்பு இல்லம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட்

இணை தயாரிப்பாளர்: எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை

இசை: ஏ ஆர் ரஹ்மான்

ஒளிப்பதிவு இயக்குனர்:

கேவெமிக் ஆரி

பாடலாசிரியர்: சினேகன், விவேக், மஷூக் ரஹ்மான்,

கிருத்திகா நெல்சன்

எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர்

நடனம்: ஷோபி பால்ராஜ், சாண்டி,
லீலாவதி

தயாரிப்பு வடிவமைப்பாளர்: லதா நாயுடு

கலை இயக்குனர்: சண்முகராஜா

தயாரிப்பு நிர்வாகி: இ.ஆறுமுகம்
விநியோக மேலாளர்:
சி.ராஜா

ஒலி வடிவமைப்பாளர்: விஜய் ரத்தினம்

ஒலிக்கலவை: ரஹமத்துல்லா

விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா

ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா

ஆடை வடிவமைப்பாளர்: கவிதா ஜே, திவ்யா லக்ஷனா

ஒப்பனை: ராஜ் கென்னடி
ஆடை அணிபவர்: வி. மூர்த்தி

நடிப்பு இயக்குனர்: வர்ஷா வரதராஜன்

DI: பிக்ஸ்சல் லைட் ஸ்டுடியோ

வண்ணம்: ரங்கா : ஆர்.ஹரிஹரசுதன்

டப்பிங் இன்ஜினியர் : என். வெங்கட பாரி

வசனங்கள் : சஜித் அலி
பிஆர ஒ : ஏஐஎம் சதீஷ்

பொங்கல் முதல் கிருத்திகா உதயநிதி
இயக்கத்தில்
ஜெயம்ரவி, நித்திய மேனன் நடப்பில்

மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் காதலிக்க நேரமில்லை

இப்போது எவர்க்ரீன் ஹிட்டான படத்தின் டைட்டிலை கிருத்திகா

உதயநிதி இந்த படத்துக்கு வைத்துள்ளார் இந்நிலையில், ரவி மற்றும் நித்யா மேனன்

படத்தை ரசிக்கும் படி செய்துள்ளார். என்பது தான் பெரிய விஷயம்

கிருத்திகா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த

காதலிக்க நேரமில்லை படத்தில் ரசிகர்களுக்கு பார்க்க பொறுமை

இருக்குமா? என்பதை
இந்த கதைக்களத்தில்
பார்ப்போம்

காதலிக்க நேரமில்லை கதை: ஜெயம் ரவி தனது

நண்பர்களான வினய் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து

தங்களது விந்தணுவை சேமித்து வைக்க முடிவு செய்யசெய்கின்றனர்.

அப்போது ரவியின் விந்தணு தவறுதலாக டோனர் லிஸ்ட்டில் சேர்க்கப்பட, 4 வருஷம் ஆனது.

காதல் செய்து ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொள்ளும்

ஜான் கொக்கனால் ஏமாற்றப்படும் ஸ்ரேயா நித்யா மேனன்

ஆண்களை வெறுத்து குழந்தையை பெற்றுக் கொள்ள கணவன் தேவையில்லை என்றும்

ஃபெர்டிலிட்டி சென்டரில் முன் பின் தெரியாத டோனர் மூலமாக

குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்.

அதன் பின்னர் என்ன ஆகும் என்பது கணிக்க முடிந்தது தான். அதே போலவே நடக்கிறது.

ஆனால், இந்த விஷயம் ரவிக்கும் நித்யா மேனனுக்கும் தெரிய வந்ததா? இல்லையா?

இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது

தான் இந்த காதலிக்க நேரமில்லை படத்தின் கதைக்களம்.

ரவியின் காதலியான டிஜே பானு ரவிக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது என்றும்

குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதை தெரிந்துக்

கொண்டு அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட

நிலையில், நிச்சயதார்த்தத்துக்கு வராமல் அவருக்கு

டாட்டா காட்டிவிட்டு செல்கிறார்.

ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக்

கொள்ளும் நித்யா மேனன் தனது

கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவருக்கு

தெரியாமல் வீட்டுக்கு வர அங்கே அவருக்கு

சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நித்யா மேனன் தோழியுடன் ஜான்

கொக்கன் உல்லாசமாக இருக்க அதை பார்த்துவிட்டு அவரை

வெறுத்து ஒதுங்குகிறார்.

ஃபெர்ட்டிலிட்டி சென்டர் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள தனது

குழந்தைக்கு யார் அப்பா என்பதை அறிந்துக் கொள்ள கொடுக்கப்பட்ட

அட்ரெஸுக்கு செல்லும் நித்யா மேனனுக்கு பெயர் மற்றும் முகவரி

என இரண்டுமே போலி என்பது தெரிய வருகிறது.

இதற்கு இடையில் ரவியை சந்திக்க நேரிடுகிறது.

ரவிக்கு குழந்தை என்றாலே பிடிக்காது

என்பதை அறிந்து அவரையும் விட்டு விலகி 8 வருடங்கள்

தனது மகனுடன் வசித்து வரும் நித்யா மேனன் மீண்டும் ரவியை

சந்திக்கும் சூழல் ஏற்பட இருவருக்கும் இடையே வேலையில் பிசினஸ் மோதல் வந்து

இடையே இடையூறாக நிற்பது சுவாரஸ்யம்.

ஜெயம் ரவியின்
நண்பராக வினய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது,

ஆங்கில படத்தை பார்க்கும் உணர்வை எற்படுத்திருகிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான் இந்த படத்திற்கு முழு பலம் என்று சொல்லலாம்.

“என்னை இழு இழு இழுக்குதடி” மற்றும் “லாவண்டர் பெண்ணே”

பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

ஜிகர்தண்டா, மிஷன் சாப்டர் ஒன், டீன்ஸ்
படங்களுக்கு

ஒளிப்பதிவு செய்த கேவ்மிக் யூ ஆரியின்

ஒளிப்பதிவு இந்த படத்துக்கு செம ரிச் லுக்கை
கொடுத்துள்ளது.

ஜெயம் ரவி இந்த படத்தில் தான்

அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்று சொல்லலாம்.

யோகி பாபு சில காட்சிகள் மட்டும் வந்து சில காமெடிகள் செய்து சிரிக்க வைக்கிறார்.

நித்யா மேனனின் மகனாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரமான

நடிப்பில் பாதிகாட்சியில் ரசிகர்களை போரடிக்காமல்

கொண்டு செல்லுகிறது காதலிக்க நேரமில்லை இந்த திரைப்படத்தில்

ஒவ்வொரு ஆணும்‌‌ பெண்ணும் காதலிப்பது தவறு இல்லை காதலிப்பது நேரமிருந்தால்‌ தீர்க்கமா

ஆணும் பெண்ணும் யோசித்து முடிவு எடுத்து இரண்டு பேரும் சிந்தித்து செயல்

படவேண்டும் என்பதை வலியுறுத்தி‌‌ இருக்கிறது

இந்த காதலிக்க நேரமில்லை

திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *